Published : 22 Sep 2015 08:22 AM
Last Updated : 22 Sep 2015 08:22 AM

தமிழக காவல்துறை முற்றிலும் செயல்படவில்லை: திமுகவில் இணைந்த முன்னாள் டிஐஜி குற்றச்சாட்டு

`நமக்கு நாமே விடியல் மீட்பு’ பய ணத்தை கன்னியாகுமரி மாவட்டத் தில் நேற்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார். அவரை சந்தித்த, கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்கோட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை டிஐஜி ஜான் நிக்கல்சன் திமுகவில் இணைந்தார்.

ஜான் நிக்கல்சன் சிபிசிஐடி டிஐஜியாக இருந்தவர். 2013-ம் ஆண்டு ஓய்வுபெற்ற இவர், திமுகவில் இணைந்த கையோடு, நேற்று ஸ்டாலினுடன் பயணம் மேற்கொண்டார்.

`தி இந்து’ நாளிதழுக்கு ஜான் நிக்கல்சன் அளித்த சிறப்புப் பேட்டி:

நீங்கள் ஏன் திமுகவில் இணைந்தீர்கள்?

தமிழகத்தில் அரசு இயந்திரம் செயல் படவில்லை. கொலை, கொள்ளைகள் அதிகரித்து விட்டன. சட்டம்-ஒழுங்கு மோசமான நிலைக்கு சென்று கொண்டி ருக்கிறது. குற்ற வழக்குகள் ஏராளமாக தேங்கி கிடக்கின்றன.

தமிழக மக்கள் பயத்தோடு வாழ் கிறார்கள். அதற்கு விமோசனம் கொடுக்க திமுகவால்தான் முடியும் என்ற நம்பிக்கையும், அமைதியான தமிழகத்தின் மீதான எதிர்பார்ப்பும் என்னை திமுகவில் இணைத்தது.

அரசுப் பணியில் ஓய்வு பெற்றுவிட்டு, அரசியலுக்கு வர வேறு காரணம் என்ன?

வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொரு ளாதார முன்னேற்றம், வெளிப்படைத் தன்மை என்பதை தாரக மந்திரமாக கொண்டு திமுக செயல்படுகிறது. இவை அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு. வேறு காரணம் எதுவும் இல்லை.

திமுகவின் வெற்றிக்கு உங்கள் பங் களிப்பை எப்படி செலுத்தப் போகிறீர்கள்?

தென் மாவட்டங்களில் போதிய தொழிற்கூடங்கள் இல்லாததால்தான் ஜாதிக் கலவரங்கள் அதிகம் நடக்கின்றன. இது குறித்து நான் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றேன். தொழில் வாய்ப்பை பெருக்க திமுக ஆட்சியில் உரு வாக்கப்பட்ட நாங்குநேரி தொழில் பூங்கா அதிமுக அரசில் செயல்பாட்டில் இல்லை. மதுவிலக்கை கொண்டு வரும் திமுகவின் நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பேன்.

தமிழக காவல்துறை சுதந்திரமாக செயல்படுகிறதா?

அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக செயல்பட்ட காலமெல் லாம் இப்போது இல்லை. இப் போதெல்லாம் காவல்துறை செயல்படவே இல்லை.

காவல் துறை உயர் அதிகாரி யாக இருந்த நீங்கள், சாமானிய மக்களை நெருங்க முடியுமா?

விருதுநகர் மாவட்டத்தில் டிஎஸ்பியாக இருந்தபோது அப்பகுதி மக்களை ஒருங்கிணைத்து, ஒரு பாலத்தை அமைத்தேன். அது இப்போதும் போலீஸ் பாலம் என்றே அழைக்கப்படுகிறது. சிவகாசி மக்களின் பங்கேற்புடன் சீர்மிகு சிவகாசியாக மாற்றினேன். தூத்துக்குடியில் எஸ்பியாக இருந்தபோது `கிராமம் செல்வோம் மக்கள் மனதை வெல்வோம்’ என்னும் பெயரில் சாமானிய மக்களுக்கு காவல் துறையின் மீதான பயத்தை போக்கினேன். வழக்கமான என் பணிதான் இதுவும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x