Published : 29 Aug 2020 10:16 AM
Last Updated : 29 Aug 2020 10:16 AM

முறையான அழைப்பு விடுக்கப்படாவிட்டாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக முதல்வரை சந்தித்து மனு அளித்தேன்: டிஆர்பி.ராஜா எம்எல்ஏ தகவல்

முறையான அழைப்பு விடுக்கப் படாவிட்டாலும் தொகுதி மக்களின் கோரிக்கைகளுக்காக தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித் தேன் என மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி.ராஜா தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் மற்றும் கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நேற்று திருவாரூர் வருகை தந்த முதல்வர் பழனிசாமியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி. ராஜா சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். அதில், நீடாமங்கலத்தில் தேசிய நெடுஞ் சாலையின் குறுக்கே செல்லும் ரயில் பாதை காரணமாக அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதற்காக நீடா மங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தை ஒட்டி புதிதாக கட்ட திட்டமிடப்பட்டுள்ள மேம்பாலப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். மன்னார்குடியில் புதை சாக்கடை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மன்னார்குடி பாமணி ஆற்றின் குறுக்கே கர்த்தநாதபுரம் பாலம் கட்டுமான பணியை விரைவாகத் தொடங்க வேண்டும்,

தஞ்சாவூர்- மன்னார்குடி இடையே நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணி கள் காரணமாக வடுவூரில் சாலை விரிவாக்கம் செய்யப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பரவாக்கோட்டையில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானப் பணியை உடன் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகள் இடம் பெற்றிருந்தன.

பின்னர் செய்தியாளர்களிடம் டிஆர்பி.ராஜா கூறியதாவது: முதல்வரின் ஆய்வு நிகழ்ச் சிக்கு முறையான அழைப்பு விடுக்கப் படவில்லை. இருப்பினும் மக்களின் கோரிக்கைகளுக்காக முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளேன். கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் உறுதி அளித்தார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x