Published : 25 Aug 2020 07:12 AM
Last Updated : 25 Aug 2020 07:12 AM

தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் வரை கட்டணம் உயர்வு: செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமல்

சென்னை

தமிழகத்தில் 21 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ம் தேதி முதல்10 சதவீதம் வரை கட்டணம் உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது.

கரோனா ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால், சுங்கச் சாவடி கட்டணத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் 21 சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது.

புதூர்பாண்டியாபுரம் (விருதுநகர்), எலியார்பதி (மதுரை), ராசம்பாளையம் (நாமக்கல்), நத்தக்கரை, ஓமலூர் (சேலம்),வீரசோழபுரம், சமயபுரம், பொன்னம்பலபட்டி, திருப்பராய்த்துறை (திருச்சி), வாழவந்தான்கோட்டை (தஞ்சாவூர்) கொடை ரோடு (திண்டுக்கல்), பாளையம் (தருமபுரி), விஜயமங்கலம், திருமாந்துறை, மொரட்டாண்டி, விக்கிரவாண்டி (விழுப்புரம்) உள்ளிட்ட 21 சுங்கச் சாவடிகள் இதில் அடங்கும்.

ரூ.5 முதல் 10 வரை உயர்வு

இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் 48-க்கும் மேற்பட்ட இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் ஏப்ரல் 1-ம் தேதியும், செப்டம்பர் 1-ம் தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, செப்டம்பர் 1-ம் தேதி முதல்21 சுங்கச் சாவடிகளில் ரூ.5 முதல்அதிகபட்சமாக ரூ.10 வரை கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x