Published : 15 Sep 2015 08:20 AM
Last Updated : 15 Sep 2015 08:20 AM

தூத்துக்குடி துறைமுகத்தில் சகாயம் ஆய்வு: கிரானைட் முறைகேடு விசாரணை முடிந்ததாக அறிவிப்பு

கிரானைட் முறைகேடு தொடர்பாக தூத்துக்குடி சுங்கத்துறை அலு வலகம் மற்றும் துறைமுகத்தில், சட்ட ஆணையர் சகாயம் நேற்று ஆய்வு நடத்தினார். கிரானைட் தொடர்பான விசாரணை மற்றும் ஆய்வு முடிவுக்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற முறைகேடுகளை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சட்ட ஆணையர் சகாயம் விசாரணை நடத்தி வரு கிறார்.

மதுரை மேலூர் பகுதியில் இருந்து கிரானைட் கற்கள், தூத் துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாகவே பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. கிரானைட் முறைகேடு வெளிச்சத் துக்கு வந்ததைத் தொடர்ந்து மதுரை பிஆர்பி உள்ளிட்ட 9 நிறுவனங்கள் கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்ய கடந்த 2012 ஆகஸ்ட் மாதம் தடை விதிக்கப்பட்டது.

மதுரை மேலூர் பகுதிகளில் பல கட்டங்களாக விசாரணை மற்றும் ஆய்வு நடத்திய சட்ட ஆணையர் சகாயம் குழுவினர், நேற்று தூத்துக்குடி சுங்கத்துறை அலுவலகம் மற்றும் வ.உ.சி. துறைமுகத்தில் ஆய்வு நடத்தினர்.

சுங்க ஆவணங்கள் ஆய்வு

காலை 11 மணியளவில் தூத்துக் குடி வந்த சகாயம் குழுவினர், துறைமுக வளாகத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்துக்கு முதலில் சென்றனர். சுங்கத்துறை கூடுதல் ஆணையர் என்.சுரேஷ் அறைக்குச் சென்று 10 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் கிரானைட் கற்கள் தூத்துக்குடி துறைமுகம் வழியாக எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன? ஆண்டுக்கு சராசரியாக எவ்வளவு கிரானைட் ஏற்றுமதி செய்யப்பட்டது? ஏற்று மதியில் வரி ஏய்ப்பு உள்ளிட்ட முறைகேடுகள் ஏதும் நடந்துள்ளதா? என்பன போன்ற விவரங்கள் தொடர் பாக, தனி அறையில் சுங்கத் துறை அதிகாரிகளிடம் சகாயம் கேட்டறிந்தார். மேலும், சுங்கத் துறை ஆவணங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வு சுமார் 2 மணி நேரம் நீடித்தது.

தொடர்ந்து துறைமுக வளா கத்தில், தடை காரணமாக ஏற்றுமதி செய்யப்படாமல் தேங்கிக் கிடக்கும் கிரானைட் கற்களை சகாயம் பார்வையிட்டார். அதிகாரிகள் மூலம் அவற்றின் மதிப்பை கணக்கிட்டு அறிந்து கொண்டார்.

சகாயம் குழுவினர் தங்கள் அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தூத்துக்குடியில் அவர் இறுதியாக ஆய்வு நடத்தியுள்ளார்.

விசாரணை முடிவு

முன்னதாக செய்தியாளர்களிடம் சட்ட ஆணையர் சகாயம் கூறும் போது, ‘கிரானைட் முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்ற உத்த ரவின் பேரில் விசாரணை நடத்தப் பட்டது.

தற்போது விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா விசாரணைகளும், ஆய்வுகளும் முடிவுக்கு வந்துவிட்டன. பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை பெறும் நிகழ்வுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டோம். விசாரணை மற்றும் ஆய்வு சுதந் திரமாக நடைபெற்று வருகிறது’ என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x