Published : 19 Aug 2020 07:20 AM
Last Updated : 19 Aug 2020 07:20 AM

சுதந்திர தினத்தன்று விடுமுறை அளிக்காத 1,241 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் துறை தகவல்

சுதந்திர தினத்தன்று விடுமுறைஅளிக்காத 1,241 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய விடுமுறை நாட்களான குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்தி ஆகிய 4 நாட்கள் மற்றும் 5 பண்டிகை விடுமுறை நாட்கள் என ஆண்டுக்கு 9 நாட்கள்தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் நலச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆணையர் இரா.நந்தகோபால் அறிவுறுத்தினார்.

அதன்படி, விதிகளை மீறியதாகதமிழகத்தில் 647 கடைகள் மற்றும்நிறுவனங்கள், 580 உணவு நிறுவனங்கள், 6 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், 7 தோட்டநிறுவனங்கள், 1 பீடி மற்றும் சுருட்டுநிறுவனம் என 1,241 நிறுவனங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைஎடுக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x