Last Updated : 18 Aug, 2020 04:12 PM

 

Published : 18 Aug 2020 04:12 PM
Last Updated : 18 Aug 2020 04:12 PM

தூத்துக்குடியில் குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற காவலர் நாட்டுவெடிகுண்டு வீசி கொலை; ரவுடியும் உயிரிழப்பு: எஸ்.பி. ஜெயக்குமார் நேரில் ஆய்வு

தூத்துக்குடியில் குற்றவாளியைப் பிடிக்கச் சென்ற இடத்தில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் காவலர் ஒருவர் உயிரிழந்தார்.

நாட்டு வெடிகுண்டு வீசியை ரவுடியும் காயமடைந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி முறப்பநாடு நாடு அருகே மணக்கரை பகுதியில் இரட்டைக்கொலை தொடர்பாக குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸார் சென்றனர்.

அப்போது, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த ரவுடி கும்பல் ஒன்று, நாட்டு வெடிகுண்டுகளை வீசியதாகக் கூறப்படுகிறது. இதில் ரவுடி துரைமுத்து என்றவர் வீசிய நாட்டுவெடிகுண்டு, காவலர் சுப்ரமணியன் மீது விழுந்ததில் அந்த காவலருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் ஒரு காவலர் காயம் அடைந்துள்ளார்.

போலீஸார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது ஒருவரைக் கைது செய்தனர். ஆயுதங்களுடன் வாகனம் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதற்கிடையில், காவலர் சுப்பிரமணி மீது நாட்டு வெடிகுண்டு வீசிய துரைமுத்துவும் நாட்டு வெடிகுண்டு காயங்களுடன் இறந்த நிலையில் மீட்கபட்டுள்ளார். அவரது சடலமும், நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து, அங்கு எஸ்.பி., ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பணியில் சேர்ந்து 3 ஆண்டுகளில் சோகம்..

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் சுப்பிரமணியன் கடந்த 2017-ம் ஆண்டு தான் காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா உட்பட்ட பண்டாரவிளை கிராமத்தைச் சேர்ந்த காவலர் சுப்பிரமணியன், தனது முதல் பணியை ஆழ்வார் திருநகரி காவல்நிலையத்தில் தொடங்கியுள்ளார்.

பணியில் இணைந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தனிப்படை பிரிவில் காவலராக பணிமாற்றம் செய்யப்பட்டார்.

\

உயிரிழந்த காவலர் சுப்ரமணியன்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஏரல் வாய்க்கால் கரை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான துரை முத்துவை போலீஸார் தீவிரமாக தேடி வந்தநிலையில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான சிறப்புப் படைப்பிரிவில் காவலர் சுப்பிரமணியன் இணைந்து பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே மணக்கரை பகுதியில் துரைமுத்து பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அவரை பிடிக்கச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இளம் காவலருக்கு நேர்ந்த இந்த முடிவு சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x