Published : 06 Aug 2020 07:47 AM
Last Updated : 06 Aug 2020 07:47 AM

சென்னை கடல் பகுதியில் செயற்கை மீன் உறைவிடம் நிறுவும் பணி: அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்

தமிழக மீன்வளத் துறை சார்பில் சென்னை காசிமேடு, ஊரூர் குப்பம் அண்மை கடல் பகுதியில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கும் பணியை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். படம் க.பரத்

சென்னை

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட கடல் பகுதிகளில் மீன்வளத்தை மேம்படுத்த ரூ.10 கோடி செலவில் 30 இடங்களில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி செயற்கை மீன் உறைவிடங்கள் நிறுவும் நிகழ்ச்சி கடல் பகுதியில் நேற்று நடைபெற்றது. சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடல் பகுதியில் 12 கிமீ பயணித்து ஊரூர் குப்பம், ஆல்காட்டு குப்பம், ஓடைக் குப்பம் ஆகிய கிராமங்களுக்கு அருகில் முக்கோணம், வளையம் மற்றும் வளைய தொகுப்புகள் ஆகிய 3வடிவங்களில் உருவாக்கப்பட்ட செயற்கை மீன் உறைவிடங்களை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நிறுவி தொடங்கி வைத்தார். முன்னதாக, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,

‘‘இந்தியாவிலேயே மீன் உற்பத்தியில் குஜராத் முதல் இடத்தில் இருந்தது. 3-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது முதல்இடத்தில் உள்ளது. அண்மைக் கடல் பகுதியில் மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் ரூ.18 கோடிஒதுக்கீடு செய்து கடலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பவளப்பாறைகள் அமைக்கப்பட உள்ளன’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x