Published : 21 Sep 2015 10:38 AM
Last Updated : 21 Sep 2015 10:38 AM

‘பெண் காவலர் நலம் பேணுதல் துறை’ மீண்டும் செயல்பட வேண்டும்: ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி கருத்து

‘பெண் காவலர் நலம் பேணுதல்’ துறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதி கூறியுள்ளார்.

திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து பெண் காவல் அதிகாரிகள் சந்திக் கும் பிரச்சினைகள் குறித்தும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஓய்வுபெற்ற பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் சில கருத்துகளை முன்வைத்துள்ளனர்

ஓய்வுபெற்ற டிஜிபி திலகவதி

மென்மையாக வளர்க்கப்பட்ட பெண்கள் மன உறுதிமிக்க காவல்துறை பணிக்கு திடீரென சேரும் போது அவர்களுக்கு அந்தப் பணி நெருக்கடியாக இருக்கலாம். பாலியல் பாகுபாடுகள் எல்லா மட்டத்திலும் உள்ளன. காவல் துறையில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஆண்கள் உள்ளனர். ஆனால், பெண்களின் எண்ணிக்கை 16 ஆயிரம் மட்டுமே. காவல்துறை பணியாளர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்காவது பெண்கள் இருக்க வேண்டும்.

2002-03-ம் ஆண்டில் ‘பெண் காவலர் நலம் பேணுதல்’ என்ற துறை அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக நியமிக்கப்பட்டேன். அப்போது மாவட்டந்தோறும் சென்று பெண் காவலர்களை சந் தித்து அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்தேன். அது பயத்தை உண்டாக்க வேண்டிய இடத்தில் பயத்தை உண்டாக்கியது. உற் சாகத்தை ஏற்படுத்த வேண்டிய இடத்தில் உற்சாகத்தை ஏற்படுத் தியது.

ஆனால் 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அந்தப் பொறுப்பில் யாரும் இல்லை. காவலர் நலம் பேணுதல் என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள துறைக்கு போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. எனவே, பெண் காவலர் நலம் பேணுதல் அதிகாரியாக ஒருவரை நியமித்து அவருக்குகீழ் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட ஒரு உளவுத் துறை இயங்க வேண்டும். பெண் காவலர்களிடம் சக அதிகாரிகள், மேல் அதிகாரிகள் எப்படி நடந்துகொள்கிறார்கள், பெண் காவலர்களின் பிரச்சினை கள் என்ன என்பதை கண்டறிய இது உதவும். பெண் காவலர் களுக்கு மன உறுதி, சமத்துவ உரிமை, சமத்துவ எண்ணத்தை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்க வேண்டும். அப்போது தான் தற்கொலை போன்ற சம்பவங்களை தவிர்க்க முடியும்.

ஓய்வுபெற்ற டிஜிபி லத்திகா சரண்

எந்தத் துறையிலும் பணிபுரியும் பெண்களுக்கு இருக்கும் அதே பிரச்சினைகள்தான் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கும் இருக்கிறது. ஒழுங்கற்ற வேலை நேரம், இரவுப் பணி, கழிப்பறைகள் இல்லாத இடத்தில் பணிபுரிவது உள்ளிட்ட சவால்களை சந்திக்க வேண்டும். இந்தப் பிரச்சினைகள் கீழ் நிலையில் உள்ள அதிகாரி களுக்கு மிகவும் அதிகமாக இருக் கும். ஆனால், காவலர்கள் சந்திக் கும் எந்தவொரு பிரச்சினையையும் எடுத்துச் சொல்ல வழிமுறைகள் உள்ளன. உயர் அதிகாரிகள் மீது புகார்கள் இருந்தால் உள்துறைச் செயலாளரிடம்கூட தெரிவிக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x