Published : 26 Sep 2015 08:24 AM
Last Updated : 26 Sep 2015 08:24 AM

விஐடியில் ‘கிராவிடாஸ்’ தொடக்கம்: புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதி ஒதுக்கீடு அவசியம் - வேந்தர் ஜி.விசுவநாதன் வலியுறுத்தல்

வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் ஆண்டுதோறும் ‘கிரா விடாஸ்’ என்ற சர்வதேச அறிவு சார் நிகழ்ச்சி நடத்தப்படும். மாண வர்களின் அறிவியல், தொழில் நுட்பத் திறமைகளை வெளிப்படுத் தும் நிகழ்ச்சியாக இது அமையும். அதன்படி, இந்த ஆண்டுக்கான கிராவிடாஸ்-2015 நிகழ்ச்சி நேற்று (25-ம் தேதி) தொடங்கியது. வரும் 27-ம் தேதி (நாளை) வரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் மீடியா பார்ட்னராக உள்ள ‘தி இந்து’ உள்ளது.

இதில், ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலை மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

கிராவிடாஸ்-2015 தொடக்க விழா நிகழ்ச்சியில் விஐடி வேந் தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசும்போது, ‘‘விஐடி பல் கலைக்கழக மாணவர்கள் உரு வாக்கிய 3டி பிரிண்டர் மற்றும் புதிய செயலிகள் இங்கு வெளி யிடப்பட்டுள்ளன. விஐடி மாண வர்களின் புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆராய்ச்சி வெளியீ டுகளின் எண்ணிக்கை 2014-ம் ஆண்டில் 1,935 ஆக உயர்ந்துள் ளது. வளர்ந்த நாடுகள் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்கின்றன. அதே நிலைமை இங்கு வரவேண்டும்’’ என்றார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்ற பாங்க் ஆப் அமெரிக்காவின் முதுநிலை துணைத் தலைவர் ரமேஷ் காசா பேசும்போது, ‘‘நாட்டில் ஆண்டு தோறும் 15 லட்சம் பட்டதாரிகள் வெளியே வருகின்றனர். இவர் களில் 3 சதவீதம் பேர்தான் வேலை பெறுகின்றனர். மற்றவர்கள் அதற் குரிய தகுதியை வளர்த்துக் கொள் ளும் வழிமுறைகளை கல்லூரிகள் உருவாக்க வேண்டும்’’ என்றார்.

முன்னதாக, விஐடி மாணவர்கள் பின்னகன் மற்றும் பிரேம்குமார் உருவாக்கிய 3டி பிரிண்டர், மாணவர் ரிஸ்பா உருவாக்கிய வேலூர் செயலி, மாணவர் சுலாப் உருவாக்கிய விஐடி மாடல் என 3 புதிய கண்டுபிடிப்புகளை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட சிறப்பு விருந்தினர் ரமேஷ் காசா பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் விப்ரோ பொது மேலாளர் கமல் சரத்ஷா, நாஸ் காம் அமைப்பின் பொதுமேலாளர் ராஜீவ் வைஷ்ணவ், மைக் ரோசாப்ட் நிறுவன மென்பொறியியல்பிரிவு பொதுமேலாளர் புருஷ் வெங்கி ரெட்டி, விஐடி துணைத் தலைவர் கள் சேகர் விசுநாதன், ஜி.வி.செல் வம் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x