Published : 28 Jul 2020 07:47 AM
Last Updated : 28 Jul 2020 07:47 AM

3 வயது சிறுவனுக்கு சிக்கலான அறுவை சிகிச்சை- எம்ஜிஎம் மருத்துவமனைக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு

சென்னை

சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை, 3 வயது சிறுவனுக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்து தமிழகத்தின் பெருமையை உலக அளவில் கொண்டு சென்றுள்ளது என்றுமுதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார்.

ரஷ்யா நாட்டைச் சேர்ந்த 3 வயது சிறுவனின் இதய வலது, இடது கீழ் அறையின் ரத்தத்தை செலுத்தும் இரண்டு பம்புகள் செயல்படாமல் இருந்துள்ளன. இந்த சிறுவன் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிறுவனுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டி இருந்ததால், சிறுவனின் இதயத்துக்குரத்தத்தை உந்தி செலுத்துவதற்கான, ‘இம்பிளான்டபிள் வென்ட்ரிக்குலார்’ கருவியை (செயற்கை பம்ப்) ஜெர்மனியை சேர்ந்த ‘பெர்லின் ஹார்ட் ஜிஎம்பிஎச் நிறுவனம்தயாரித்து வழங்கியது. இதைஅடுத்து, மருத்துவமனையின் கார்டியாக் சயின்ஸ் பிரிவு இயக்குநர் பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவ குழுவினர் 7 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்துகருவிகளை பொருத்தினர்.இதன்மூலம் இம்மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பில், “3 வயதுசிறுவனுக்கு மிகவும் சிக்கலான இதய அறுவை சிகிச்சையை எம்ஜிஎம் மருத்துவமனை செய்துள்ளது. தமிழகத்தின் பெருமையை உலகசுகாதார வரைபடத்துக்கு கொண்டு சென்ற எம்ஜிஎம்மருத்துவமனைக்கு எனதுமனமார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x