Published : 26 Jul 2020 08:11 AM
Last Updated : 26 Jul 2020 08:11 AM

82-வது பிறந்த நாள் பாமக நிறுவனர் ராமதாஸுக்குபிரதமர், தலைவர்கள் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு நேற்று 82-வது பிறந்தநாள். இதையொட்டி, ராமதாஸை பிரதமர் நரேந்திர மோடி தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். அவரதுஉடல்நலம் குறித்தும் கேட்டறிந்தார் என்று பாமக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘ராமதாஸை துணை முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டுநல்ல உடல்நலத்துடனும், நீண்டஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ வேண்டும் எனவாழ்த்து தெரிவித்துக் கொண்டார்’ என கூறப்பட்டுள்ளது.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், ‘பாமக நிறுவனர் ராமதாஸ், உடலும் உள்ளமும், நலமும் திடமும் கொண்டு நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, சமக தலைவர் ஆர்.சரத்குமார்,உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி குலசேகரன் உட்பட பலரும் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x