Published : 26 Jul 2020 08:01 AM
Last Updated : 26 Jul 2020 08:01 AM

காசிமேடு மீன் சந்தையில் குவிந்த வியாபாரிகள்

தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு இன்று கடைபிடிக்கப்படுவதால், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன் வாங்க வியாபாரிகள் குவிந்தனர். படம்: ம.பிரபு

சென்னை

தமிழகம் முழுவதும் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று ஆயிரக்கணக்கான வியாபாரிகள் மீன்களை வாங்க குவிந்தனர்.

தமிழகத்தின் மிகப்பெரிய மீன்பிடி துறைமுகமான காசிமேட்டில் உள்ளமீன் சந்தையில் சமூக இடைவெளியை உறுதி செய்ய சில்லறை விற்பனைக்கு ஏற்கெனவே தடைவிதிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியுடன் வியாபாரிகள் சென்று வர தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால், நேற்றே மீன்களை விற்கதிட்டமிட்டிருந்த மீனவர்கள், ஆழ்கடலுக்கு சென்று நேற்று முன்தினம் இரவு பல்வேறு வகையான மீன்களைஅதிக அளவில் பிடித்து வந்தனர்.

இந்த மீன்களை வாங்க சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்துபல்லாயிரக்கணக்கான வியாபாரிகள் நேற்று காசிமேட்டில் குவிந்தனர்.அவர்களை ஒழுங்குபடுத்தும் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார்ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள்வருவதை தடுக்க, வியாபாரிகளுக்குஏற்கெனவே அனுமதி சீட்டுகளைபோலீஸார் வழங்கி இருந்தனர்.விதிமீறல்களில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x