Published : 24 Jul 2020 07:39 AM
Last Updated : 24 Jul 2020 07:39 AM

உதகை கரோனா சிகிச்சை மைய வளாக திறந்தவெளியில் வீசப்பட்ட கவச உடைகள்- குரங்குகள் எடுத்துச் சென்றதால் அச்சம்

உதகையில் கரோனா சிகிச்சை சிறப்பு மைய திறந்தவெளியில் வீசப்பட்ட கவச உடைகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்களை குரங்குகள் எடுத்துச் சென்றதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை,குன்னூர் அரசு மருத்துவமனைகள், உதகை அருகே இரண்டுதனியார் பள்ளிகள் ஆகியவை தற்காலிக கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு போதியஅடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ள நிலையில், லவ்டேல்பகுதியிலுள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில், ஊழியர்களின் கவசஉடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் திறந்தவெளியில் கொட்டப்பட்டு, அவற்றை குரங்குகள் எடுத்துச் செல்லும் வீடியோசமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

பொதுமக்கள் கூறும் போது, ‘கரோனா வார்டுகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்களை பாதுகாப்பின்றி திறந்தவெளியில் வீசினால், அவற்றை குரங்குகள் எடுத்துச் சென்று வனப்பகுதிகளில் விட்டுச் செல்கின்றன. இதனால், விலங்குகளுக்கும் கரோனா தொற்று அபாயம் ஏற்படும்’ என்றனர்.

இதுகுறித்து மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பாலுசாமியிடம் கேட்டபோது, 'புகார் வந்தவுடன்,பயன்படுத்தப்பட்ட கவச உடைகள் மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டன. இதுதொடர்பாக மருத்துவ ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x