Published : 02 Sep 2015 08:28 AM
Last Updated : 02 Sep 2015 08:28 AM

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் வகுப்புகள் தொடங்கின: மாணவர்களுக்கு பூங்கொத்துடன் சீனியர்கள் வரவேற்பு

தமிழகம் முழுவதும் அரசு மருத் துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. புதிதாக சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி யில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (15 சதவீதம்) 398 எம்பிபிஎஸ் இடங்க ளும், 15 பிடிஎஸ் இடங்களும் ஒதுக்கப்பட்டன. எஞ்சிய 2,257 எம்பிபிஎஸ் இடங்கள், 85 பிடிஎஸ் இடங்கள் இரண்டு கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப் பட்டன.

இந்நிலையில் அரசு மருத்து வக் கல்லூரிகள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத் துவக் கல்லூரியில் முதலாண்டு வகுப்பு நேற்று தொடங்கியது. காலை 9 மணியில் இருந்து மாணவ, மாணவிகள் உற்சாகத் துடன் வகுப்புக்கு வரத் தொடங் கினர். முதல் நாள் என்பதால் பெற்றோரும் வந்திருந்தனர். கல்லூரியில் புதிதாக சேர்ந்தி ருக்கும் மாணவர்களை சீனியர் மாணவர்கள் பூங்கொத்து, இனிப்பு கொடுத்து வரவேற்றனர்.

சென்னை சென்ட்ரல் அருகே மத்திய சிறை இருந்த இடத்தில் சென்னை மருத்துவக் கல்லூரிக்காக (எம்எம்சி) கட்டப் பட்டுள்ள புதிய கட்டிடத்தில் முதலாண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களை டீன் ஆர்.விமலா, பேராசிரியர்கள் வரவேற்றுப் பேசினர். பாரம்பரியமிக்க சென்னை மருத்துவக் கல்லூரி யின் வரலாற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இதேபோல மற்ற மருத்து வக் கல்லூரிகளிலும் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் டீன் நாராயணபாபு, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் டீன் ஐசக் கிறிஸ்டி யன் மோசஸ், ஆர்எம்ஓ டாக்டர் ரமேஷ், சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் டீன் பி.சரவணன் ஆகியோர் முத லாண்டு மாணவர்களை பூங் கொத்து கொடுத்து வர வேற்றனர்.

புதிய கல்லூரியில்..

தமிழகத்தில் 19 அரசு மருத்து வக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கின. சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் முதலாண்டு வகுப்புகள் நேற்று தொடங்கவில்லை.

இதுகுறித்து கல்லூரி டீன் ஆர்.சாந்தி மலர் கூறியதாவது:

புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரி என்பதால் முதலாண்டு வகுப்பு தொடங்க செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டன. இதர வேலைகள் நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள மாணவர்கள் மட்டும் கல்லூரிக்கு வந்தனர். அவர்களுக்கு பாடப் புத்தகங்கள் போன்றவற்றை கொடுத்து அனுப்பியுள்ளோம். 3-ம் கட்ட கலந்தாய்வு விரைவில் நடக்கவுள்ளது. அந்த மாணவர் களும் சேர்ந்த பிறகு, முதலாண்டு வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x