Published : 09 Jul 2020 07:22 AM
Last Updated : 09 Jul 2020 07:22 AM

வட்டார அரசு மருத்துவமனைகளில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு: கூடுதலாக 1,000 படுக்கை வசதி ஏற்படுத்த திட்டம்

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வு மேற்கொண்டார்.

மாமல்லபுரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உட்படபல்வேறு பகுதிகளில் உள்ளமருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களைதனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவமனைகளில் படுக்கை வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக, வட்டார மருத்துவமனைகளில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஈசிஆர் சாலை, அதை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள தனியார் கல்லூரிகளில் சில இடங்களை மருத்துவமனையாக மாற்றி, படுக்கை வசதி ஏற்படுத்துவதற்காக சில கல்லூரிகளையும் ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, சுகாதாரத் துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஈசிஆர் சாலையோரம் உள்ளமாமல்லபுரம் அரசு மருத்துவமனைஉள்ளிட்ட வட்டார மருத்துவமனைகள் மூலம் கூடுதலாக 1,000 படுக்கைவசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் செய்யூர், திருப் போரூர்,திருக்கழுக்குன்றம் மருத்துவமனைகளில் தலா 15, மாமல்லபுரத்தில் 20, செங்கல்பட்டில் 200, மதுராந்தகம் 50, தாம்பரம் 500, சானடோரியம் டிபி மருத்துவமனையில் 110 என படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. விரைவில் பணி தொடங்கப்பட உள்ளது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x