Published : 06 Jul 2020 07:05 AM
Last Updated : 06 Jul 2020 07:05 AM

4 மாவட்டங்களில் இன்றுமுதல் வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்

சென்னை

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை இம்மாதம் 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளது. அத்துடன், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் 19-ம் தேதி பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கை நேற்றுவரை (5-ம் தேதி) வரை நீட்டித்திருந்தது.

இந்நிலையில், முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் இன்று (6-ம் தேதி) முதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்குள்ள வங்கிகள் இன்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன்காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்கமான நேரத்தில் செயல்படும். அத்துடன், பொதுமக்களும் பரிவர்த்தனை மேற்கொள்ள வங்கிகளுக்குள் அனுமதிக்கப்படுவர்.

எனினும், மதுரையில் முழு ஊரடங்கு 12-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அங்கு உள்ள வங்கிக் கிளைகள் வரும் 10-ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே செயல்படும். பொதுமக்களுக்கான வங்கி சேவை வழங்கப்பட மாட்டாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x