Published : 02 Jul 2020 07:09 AM
Last Updated : 02 Jul 2020 07:09 AM

சுகாதாரக் குழு அறிக்கை வந்தவுடன் கரோனா தொற்று மரணங்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படும்: சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னையில் கரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக சுகாதாரக் குழுவின் ஆய்வு அறிக்கை வந்தவுடன் அவை வெளிப்படையாக மக்களுக்கு தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மண்டலம், மேற்கு மாம்பலம் பகுதியில் நடைபெற்று வரும் காய்ச்சல் பரிசோதனைமுகாம்களை சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் தினமும் 500-க்கும் மேற்பட்ட காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் தொற்று அறிகுறி உள்ளவர்கள் எளிதில் கண்டறியப்படுகிறார்கள். இதுவரை 1,327 முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 27 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர்.

வைட்டமின் சி சத்துள்ள உணவுகளை உண்பது, ஆவி பிடித்தல், மஞ்சள், உப்பு சேர்த்துவாய் கொப்பளித்தல் போன்றஅறிவுரைகளை இந்திய மருத்துவ துறை வழங்கியுள்ளது. சென்னையில் கரோனாவால்ஏற்பட்ட இறப்புகள் குறித்து சுகாதார அலுவலர்கள் குழு ஆய்வுசெய்து வருகிறது. அந்தஆய்வு இறுதி நிலையை எட்டியுள்ளது. அறிக்கை இறுதிசெய்யப்பட்டவுடன் அது வெளிப்படையாக விரைவில் வெளியிடப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x