Published : 25 Jun 2020 06:58 PM
Last Updated : 25 Jun 2020 06:58 PM

தமிழகத்தில் உச்சபட்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கரோனா; 70 ஆயிரத்தைக் கடந்த பாதிப்பு எண்ணிக்கை; சென்னையில் 1,856 பேருக்குத் தொற்று

சென்னை

தமிழகத்தில் உச்சபட்சமாக இன்று மட்டும் 3,509 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,856 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (ஜூன் 25) கரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 32 ஆயிரத்து 543 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 10 லட்சத்து 8,974 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று மட்டும் 30 ஆயிரத்து 307 தனி நபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 9 லட்சத்து 60 ஆயிரத்து 674 தனிநபர்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அரசு சார்பாக 47, தனியார் சார்பாக 41 என மொத்தம் 88 கரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன.

இன்று மட்டும் 2,236 பேர் ஒரே நாளில் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 39 ஆயிரத்து 999 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இன்று 45 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அதில் 16 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 29 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் இருந்தவர்கள் 42 பேர். இணை நோய் அல்லாதவர்கள் 3 பேர்.

இன்று கரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக, 1,856 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 47 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது''.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. பட்டியலைக் காண: ஜூன் 25-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. பட்டியலைக் காண:ஜூன் 25 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை; முழுமையான பட்டியல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x