Published : 04 Sep 2015 08:57 AM
Last Updated : 04 Sep 2015 08:57 AM

பாமக பிரதான எதிர்கட்சியாக செயல்படுகிறது: இளைஞரணித் தலைவர் அன்புமணி பெருமிதம்

தமிழகத்தில் பாமகதான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்படுகிறது என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக சார்பில் ‘Anbumani- for change’ என்ற கைபேசி செயலி சேவை தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த சேவையைத் தொடங்கிவைத்து அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

ஆளும் கட்சி மீது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கிறார் கள். நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. 110 விதியின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 500 அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டு, அதற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை.

திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சி அந்தஸ்தை அக்கட்சி இழந்தது. மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற வில்லை. தமிழகத்தில் பாமகதான் பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக தலைமையில்தான் கூட்டணி. அதில் திமுக, அதிமுக-வுக்கு இடமில்லை.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வாக்கு வங்கி இல்லாமல் வெற்றிபெற்றது போல் பாமகவும் வெற்றிபெறும். தமிழகத்தில் மொத்தம் உள்ள வாக்காளர்களில் 50 சதவீதத்தினர் நடுநிலை வாக்காளர்கள். அதில் 35 சதவீதம் பேர் இளைஞர்கள். அவர்களின் வாக்குகளை பெற திட்டமிட்டிருக்கிறோம். அமெரிக்க அதிபர் ஒபாமா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் சமூக ஊடகங்களைக் கொண்டே வியத்தகு வெற்றியை பெற்றுள்ளனர். அதே போன்று தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டுவரும் வகையில் கைபேசி செயலி சேவையை தொடங்கியிருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x