Last Updated : 15 Jun, 2020 06:44 PM

 

Published : 15 Jun 2020 06:44 PM
Last Updated : 15 Jun 2020 06:44 PM

சட்டவிரோதமாக இந்தியா வந்த இலங்கை நபர்களுக்கு ஜாமீன் 

மதுரை

சட்டவிரோதமாக இந்தியா வந்த இலங்கையைச் சேர்ந்த 3 பேருக்கு உயர் நீதிமன்ற கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருஷனன் என்ற சூரன், அருள்வசந்தன், மாறன். இவர்கள் சட்டவிரோதமாக இந்தியா வந்ததாக கூறி வெளிநாட்டினர் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் 3 பேரையும் ராமேஸ்வரம் டவுன் போலீஸார் கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதால், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில் இலங்கைக்கு திரும்பி செல்ல விரும்புவதாக 3 பேரும் தெரிவித்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் 3 பேருக்கும் ஜாமீன் வழங்க அரசு வழக்கறிஞர் ராபின்சன் ஆட்பேசம் தெரிவித்தார்.

இருப்பினும் 3 பேருக்கும் ஜாமீன் வழங்கிய நீதிபதி, 3 பேரையும் கீழமை நீதிமன்றம் சொந்த ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும். தேவைப்படும் போது விசாரணைக்கு மனுதாரர்கள் ஆஜராக வேண்டும்.

மனுதாரர்களை ஜாமீனில் விடுவிக்கும் போது தேவையான கூடுதல் நிபந்தனைகளை கீழமை நீதிமன்றம் விதிக்கலாம்.

நிபந்தனைகளை மீறினால் 3 பேர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க கீழமை நீதிமன்றத்துக்கு உரிமை வழங்கப்படுகிறது என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x