Last Updated : 18 Sep, 2015 09:55 AM

 

Published : 18 Sep 2015 09:55 AM
Last Updated : 18 Sep 2015 09:55 AM

மதிமுகவிலிருந்து ஒரே வாரத்தில் இரு மாவட்டச் செயலர்கள் திமுகவில் இணைந்தனர்: மேலும் பலரை இழுக்க திமுக திட்டம்

சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் நேற்று திமுகவில் சேர்ந்தார். ஒரே வாரத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் இருவர் திமுகவில் இணைந்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மதிமுகவைச் சேர்ந்த மேலும் பலரை இழுக்க திமுக முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 13-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அதி முகவுக்கு ஆதரவாக வைகோவின் செயல்பாடுகள் அமைந்துள்ளதால் மதிமுகவில் இருந்து விலகியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் கு.சீ.வெ. தாமரைக்கண்ணன், துணை செய லாளர் எஸ்.வி.ராஜேந்திரன், மற்றொரு துணை செயலாளர் டி.ஆனந்தி கண்ணன், மாவட்ட அவைத்தலைவர் ஜெயவேல், சேலம், வாழப்பாடி, பெத்தநாயக் கன் பாளையம், ஓமலூர் ஆகிய ஒன்றியங்களின் மதிமுக செய லாளர்களும் நேற்று திமுகவில் இணைந்தனர். மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரியும் சென்னை அண்ணா அறிவால யத்தில் கருணாநிதி முன்னிலை யில் நேற்று திமுகவில் இணைந் தார். ஒரே வாரத்தில் மதிமுக மாவட்டச் செயலாளர்கள் இரு வரும் சேலம் மாவட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் திமுகவில் இணைந்திருப்பது மதிமுகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பின்னர் கூட்டணியில் இருந்து விலகினார். திமுக, அதிமுவை அவர் எதிர்த்து வந்த நிலையில், தனது சகோதர் மகனின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக கடந்த மே 17-ம் தேதி வைகோவை அவரது வீட்டில் ஸ்டாலின் சந்தித்தார். அத னைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கருணாநிதி முன் னிலையில் வைகோ பேசினார். இதனால் திமுக மதிமுக இடையே இணக்கமான சூழல் இருப்பதாகவும் அது கூட்டணி யாக மாற வாய்ப்பு இருப்பதாக வும் இருதரப்பிலும் பேசப்பட்டது.

ஆனால், மதிமுக தலைமையில் 5 கட்சி கூட்டணி அமைந்த பிறகு ‘‘திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை'' என வைகோ அறிவித்தார். இதனால் கோபமடைந்த திமுக தலைமை, மதிமுக முக்கிய நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 15-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பேசிய கருணாநிதி, ‘‘எந்த புயலும் திமுகவை வீழ்த்த முடியாது. எத்த கைய புயலையும் தாங்கும் ஆற்றலும், வீரமும் திமுகவினருக்கு உண்டு. திமுக அமைக்கவுள்ள கூட்டணியை உடைக்க நினைப் பவர்கள் உடைந்து போவார்கள்'' என்றார். வைகோ மீதான கோபத் தையே கருணாநிதி இப்படி வெளிப் படுத்தியதாக திமுகவினர் தெரிவித் தனர். அதனை உறுதிப்படுத்தும் வகையில் நேற்று சேலம் மாவட்ட திமுக செயலாளர் தாமரைக் கண்ணன், மாநில மகளிரணி செயலாளர் குமரி விஜயகுமாரி ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.

மேலும் பல முக்கிய மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நேரத்தில் முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்து வருவது மதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x