Published : 01 Jun 2020 07:00 AM
Last Updated : 01 Jun 2020 07:00 AM

குடும்ப வன்முறை தொடர்பாக ஊரடங்கு காலத்தில் 900 புகார்கள்

ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 900 புகார்கள் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பாக சமூகநலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:

ஊரடங்கு காலத்தில் 181 உதவி எண் மூலம் 356 புகார்கள், 1091 உதவி எண் மூலம் 32 புகார்கள், 1098 உதவி எண் மூலம் 16 புகார்கள், 100 காவல் உதவி எண்ணில் 62 புகார்கள், பாதுகாப்பு அலுவலர்கள், அங் கன்வாடி பணியாளர்கள் உள் ளிட்டோர் மூலமாக பெறப்பட் டவை 472 புகார்கள் என மொத்தம் ஊரடங்கு காலத்தில் குடும்ப வன்முறை தொடர்பாக 938 புகார்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

கவுன்சிலிங்கில் தீர்வு

குடும்ப வன்முறை தொடர் பான புகார்களை மட்டும் காவல் துறை உள்ளிட்ட அனைத்து உதவி எண்களிடம் இருந்தும் பெற்று கவுன்சில்கள் அளிப்பது, சட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கவுன்சிலிங்குகளிலேயே முடிந்த வரை கணவன், மனைவி இடை யிலான பிரச்சினை தீர்க்கப்படு கிறது.

வீட்டில் இருக்க முடியாத பெண்களுக்கு ஒன் ஸ்டாப் சென்டரில் 5 நாட்களுக்கு தேவை யான உணவு, இருப்பிட வசதி களை செய்து தருகிறோம். நீண்ட நாட்களாக இருக்க விரும்பு பவர்களை ஸ்வதார் இல்லங் களில் தங்க வைத்து வரு கிறோம்.

தேவைப்பட்டால் சட்ட உதவி களும் அளிக்கப்பட்டு வருகின் றன. இவ்வாறு, குடும்ப வன் முறை தொடர்பான அழைப்புகள் மற்றும் புகார்கள் மீது உடனுக் குடன் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x