Published : 19 May 2020 08:38 AM
Last Updated : 19 May 2020 08:38 AM

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுடன் திமுக நிர்வாகி வி.பி.துரைசாமி திடீர் சந்திப்பு

தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை, திமுக துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி நேற்று சந்தித்துப் பேசினார்.

சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்துக்கு நேற்று மாலை5 மணிக்கு வந்த திமுக துணைப்பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, எல்.முருகனை சந்தித்து மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது பட்டியலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகதயாநிதி மாறன் மீது வன்கொடுமைதடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று எல்.முருகன் அறிக்கை விடுத்தார். தயாநிதி மாறனை கைது செய்யக் கோரி தமிழகம் முழுவதும் பாஜகஎஸ்.சி. அணியினர் புகார் அளித்துள்ளனர். சென்னை மாநகர காவல்ஆணையரிடம் பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் திமுகவின் முக்கியப் பொறுப்பில் உள்ள ஒருவர்தமிழக பாஜக தலைவர் முருகனை சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சந்திப்பு தொடர்பாக பாஜக நிர்வாகிகளிடம் கேட்டபோது, வி.பி.துரைசாமி தனிப்பட்ட முறையில் எல்.முருகனை சந்தித்ததாக தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x