Published : 25 Aug 2015 09:23 AM
Last Updated : 25 Aug 2015 09:23 AM

மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்தவர்: அப்துல் கலாமுக்கு சட்டப்பேரவையில் புகழஞ்சலி- செந்தூர்பாண்டியன், எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் இரங்கல்

‘இந்தியா வல்லரசாக கனவு காணுங்கள்’ என்று மாணவர் களிடையே தன்னம்பிக்கையை வளர்த்தவர் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் என்று சட்டப்பேரவையில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப் பட்டது. முன்னாள் அமைச்சர் பி.செந்தூர் பாண்டியன், இசைய மைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மானியக் கோரிக்கை விவாதங் களுக்காக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங் கியது. சரியாக காலை 10 மணிக்கு பேரவை நிகழ்ச்சிகள் தொடங்கின. முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்று பேரவைத் தலைவர் பேசினார். அதைத் தொடர்ந்து இரங்கல் குறிப்புகளை பேரவைத் தலைவர் வாசித்தார்.

முதலில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் தி.ப ஆறுமுகம். பி.முருகையன், செ.கிருஷ்ணன், ஆர்.கிருஷ்ண சாமி கோபாலர், கே.மருதாசலம், இரா.மகேந்திரன், சோ.பால்ராஜ், அழகு திருநாவுக்கரசு, ச.சங்கு முத்து தேவர், கு.தங்கமுத்து ஆகிய 10 பேருக்கு இரங்கல் குறிப்பு களை பேரவைத் தலைவர் வாசித்தார். அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக உறுப்பி னர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம், முன்னாள் அமைச்சரும் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ-வுமான பி.செந்தூர்பாண்டியன், இசைய மைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களை பேரவைத் தலைவர் வாசித்தார். அதன் விவரம்:

இந்தியாவின் ஏவுகணை நாயகன், அணுசக்தி நாயகன், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என போற்றப்படுபவர், அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர், நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக இருந்தவர் ‘பாரத ரத்னா’ ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். அவர், தனது 83-வது வயதில் கடந்த ஜூலை 27-ம் தேதி திடீரென மறைந்தார்.

2020-ம் ஆண்டுக்குள் இந்தியா வல்லரசாக வேண்டும் என கனவு கண்டவர் கலாம். மாணவர் களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க ‘கனவு காணுங்கள். அது உறக்கத்தை விரட்டும் கனவாக இருக்க வேண்டும்’ என்று போதித்தார்.

அவரது பிறந்த தினம் ‘இளைஞர் எழுச்சி நாளாக’ தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது நினைவைப் போற்றும் விதமாக ‘டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் விருது’ சுதந்திர தினத்தன்று தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. அவரை பிரிந்து வருந்தும் குடும்பத்தினருக்கு பேரவை தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

செந்தூர்பாண்டியன்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக 2011-ம் ஆண்டு தேர்வு செய்யப் பட்டவர் பூ.செந்தூர் பாண்டியன். ஜூலை 2011 முதல் மே 2015 வரை கதர், கிராமத் தொழில்கள் துறை, சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி யவர். சிறிது காலம் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஜூலை 11-ம் தேதி 64-வது வயதில் மறைந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன்

மெல்லிசை மன்னர் என்றும் எம்எஸ்வி என்றும் அன்புடன் அழைக்கப்படுபவர் பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தமிழ்த் திரையுலகில் மாபெரும் சகாப்தமாக திகழ்ந்த அவர், உடல் நலிவுற்று கடந்த ஜூலை 14-ம் தேதி காலமானார்.

தமிழ்த்தாய் வாழ்த்தான ‘நீராரும் கடலுடுத்த...’ பாடலுக்கு மோகன ராகத்தில் இசைய மைத்து தமிழர்களின் இதயத்தில் குடிகொண்டு அனைவராலும் போற்றப்படுபவர் இசையமைப் பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

செந்தூர்பாண்டியன், எம்.எஸ்.விஸ்வநாதனை இழந்து வாடும் அவர்களின் குடும்பங்களுக்கு பேரவை ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு பேரவைத் தலைவர் கூறினார். இதையடுத்து, மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அனைவரும் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். அத்துடன் பேரவை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு பேரவை யில் அமைச்சர்கள் வரிசைக்கு அடுத்த வரிசையில் இடம் ஒதுக்கப் படுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் அமைச்சர் மற்றும் கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, எதிர்க் கட்சி வரிசையில் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் அமர்ந்துள்ள பகுதி யில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இனிப்பு வழங்கிய எம்எல்ஏ

சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் முடிந்து முதல்வர் ஜெயலலிதா புறப்பட்டு சென்றதும், முன்னாள் அமைச்சரும், புவனகிரி எம்எல்ஏ வுமான செல்வி ராமஜெயம், அரசின் 4 ஆண்டு நிறைவையொட்டி, தலைமைச் செயலக வளாகத்தில் அனைவருக்கும் இனிப்பு வழங் கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x