Published : 06 May 2020 08:07 AM
Last Updated : 06 May 2020 08:07 AM

ஊரடங்கால் வீடுகளில் மின்பயன்பாடு அதிகரிப்பு; மின்கட்டணம் இருமடங்காகும் அபாயம்: கணக்கெடுக்க ஊழியர்கள் வராததால் நுகர்வோர் அச்சம்

சென்னை

ப.முரளிதரன்

ஊரடங்கால் வீடுகளில் மின்பயன் பாடு கடந்த 2 மாதங்களாக அதிகரித்து, 500 யூனிட்டுக்கும் மேல் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இருமடங்கு மின்கட்டணம் செலுத்த வேண்டுமோ என்ற அச்சம் நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்படுகிறது. இதில், நூறு யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 500 யூனிட்டுக்கு மேல் சென்றால், மின்கட்டணம் இரட்டிப்பாக வசூல் செய்யப்படும்.

தற்போது ஊரடங்கு அமலால் மின்சாரத்தை கணக்கெடுக்க, ஊழியர்களால் வீடுகளுக்கு நேரில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான மின்கட்டணத்தை, அதற்கு முந்தைய மாதமான பிப்ர வரி, மார்ச் மாதம் செலுத்தப்பட்ட கட்டணத்தையே செலுத்துமாறு மின்வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், வீடுகளில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதத்துக்கான மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், 500 யூனிட்டுக்கு மேல் அதிகரிக்கும் என்றஅச்சம் நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து, மின்நுகர் வோர் கூறியதாவது:

மின்பயன்பாடு குறித்து கணக்கெடுக்க மின்வாரிய ஊழியர்கள் வீடுகளுக்கு வர முடியாததால், மார்ச்,ஏப்ரல் மாதத்துக்கான கட்டணத்தை அதற்கு முந்தைய ஜனவரி, பிப்ரவரி மாதம் செலுத்தப்பட்ட மின்கட்டணத்தையே செலுத்துமாறு மின்வாரியம் தெரிவித்தது.

ஜனவரி, பிப்ரவரி மாதம் குளிர்காலம் என்பதால், அப்போது மின்பயன்பாடு குறைவாக இருந்தது. இதனால், மின்கட்டணமும் குறைவாக இருந்தது. தற்போது, கோடைகாலம் என்பதால் வீடுகளில் ஏசி உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அத்துடன், பல ஊழியர்கள் தற்போது வீடுகளில் இருந்து பணிபுரிவதாலும் மின்பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதனால், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பெரும்பாலான வீடுகளில் மின்பயன்பாடு ஏறக்குறைய 500 யூனிட்டை நெருங்கியுள்ளது.

மேலும், ஊரடங்கு மே 17-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இம்மாதமும் மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க மின்வாரிய ஊழியர்கள் வருவது சந்தேகமே. இதனால், மின்பயன்பாடு 500 யூனிட்டைத் தாண்டும். அவ்வாறு ஏற்பட்டால் மின்கட்டணம் இரண்டு மடங்கு கட்ட நேரிடும். இதற்கு மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நுகர்வோர் கூறினர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது மின்கட்டணம் செலுத்துவதற்கு மட்டுமேமே 22 வரை அரசு அவகாசம்வழங்கியுள்ளது. 500 யூனிட்டுக்குமேல் செல்லும் நுகர்வோருக்கு மின்கட்டணம் செலுத்துவதில் சலுகைஏதும் வழங்கப்படவில்லை.

எனினும், இப்பிரச்சினை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அரசுஎடுக்கும் முடிவின்படி செயல் படுத்தப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x