Published : 26 Aug 2015 07:38 AM
Last Updated : 26 Aug 2015 07:38 AM

வணிகர் சங்கங்கள் உண்ணாவிரதப் போராட்டம்

அந்நிய தயாரிப்புப் பொருட்களை ஆய்வு செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தலைமை யேற்ற வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:

அந்நிய தயாரிப்புப் பொருட்கள் பெரும்பாலும் தரமற்றதாகவும், இரசாயனப் பொருட்கள் அதிகம் கலந்திருப்பதாகவும் இருக்கின் றன. விளம்பரங்கள் வழியாக அந் நிய கம்பெனிகள் தயாரிக்கும் பொருட்கள் எளிதாக மக்களைச் சென்றடைகின்றன. நம் நாட்டு உற்பத்திப் பொருட்கள் விற்பனை யில் தேக்கமடைகின்றன. இத னால், உள்நாட்டு தொழில் உற்பத்தி பெரிதும் அழிந்து வருகிறது.

உலக வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அந்நிய தயாரிப்புகள் பெரிய அளவில் நம் நாட்டில் விற்கப்படுகின்றன. அந்நிய தயாரிப்புப் பொருட்களை நாங்களே விலைக்கு வாங்கி, தமிழக அரசிடம் கொடுத்து ஆய்வு செய்திட வலியுறுத்தவுள்ளோம். நாங்களும் அந்நியப் பொருட்களை ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு செய்ய இருக்கிறோம். பொதுமக்க ளும் அந்நிய தயாரிப்புப் பொருட்களை புறக்கணிக்க வேண் டும். நமது உள்நாட்டு பொருட்களை வாங்கி ஆதரவு தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

உண்ணாவிரதப் போராட் டத்தை மருத்துவர் எம்.ஏ.ஜியாவுல் லாகான் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் கே.தேவராஜ், மாநிலப் பொரு ளாளர் எஸ்ஸார்.வி.ரத்தினம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x