Published : 01 May 2020 07:50 AM
Last Updated : 01 May 2020 07:50 AM

ஜூலைக்குள் அனைத்து நாடுகளும் கரோனாவில் இருந்து விடுபடும்- சேப்பியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை நம்பிக்கை

சென்னையை தலைமையிடமாகக் கொண்டது ‘சேப்பியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளை’ (www.sapiensfoundation.org). பிரபல சிறுநீரகவியல் நிபுணரான டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் தலைவராக இருந்து இதை நடத்தி வருகிறார். சிறுநீரகப் பாதுகாப்பு தொடர்பாக சிறப்புரை நிகழ்ச்சி, விவாதங்கள், விழிப்புணர்வு முகாம், நடைபயணம், மேடை நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளை இந்த அறக்கட்டளை நடத்தி வருகிறது.

இந்தியாவில் கரோனா பாதிப்பின் நிலை குறித்து சேப்பியன்ஸ் ஹெல்த் அறக்கட்டளைவெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது, பெரிய நாடான இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்திய அரசு மிகச் சரியான நேரத்தில் முழு அடைப்பு நடவடிக்கையை எடுத்து, அதைஉரிய காலத்துக்கு நீட்டிப்பு செய்ததே இதற்கு காரணம். பரிசோதனையை அதிகரிக்கும்பட்சத்தில் ஓரளவு அறிகுறி உள்ளவர்கள், அறிகுறி இல்லாதவர்களுக்கும் பாதிப்பு இருப்பது தெரியக்கூடும். ஆனபோதிலும், வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

கரோனா வைரஸ் கிருமி, நிமோனியாவை உண்டாக்கியே உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. கோடையில் நிமோனியாவுக்கான வாய்ப்பு குறைவு. எனவே,அதிக அளவிலான வென்ட்டிலேட்டர்கள், படுக்கை வசதிகளின்தேவையை நாம் தவிர்த்துவிடமுடியும். அதே நேரம், ஊரடங்குநீக்கப்பட்ட பிறகும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு சமூகஇடைவெளி, முழுமையாக கைகழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

அதிக உயிரிழப்புகளின்றி கரோனாவை இந்தியா விரைவில் வெற்றிகொள்ளும். அனைத்து இடங்களிலும் கோடைகாலமும் தொடங்கிவிடும் என்பதால், ஜூலைக்குள் உலகம் முழுவதும் கரோனா பாதிப்பில் இருந்து விடுபடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x