Published : 20 Aug 2015 08:21 AM
Last Updated : 20 Aug 2015 08:21 AM

போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் காவல் துறையினர் தடுக்க வேண்டும்: விஜயகாந்த், கி.வீரமணி, முத்தரசன் கோரிக்கை

தமிழக காங்கிரஸ் தலைவர் இளங் கோவனுக்கு எதிரான போராட் டங்கள் வன்முறையாக மாறாமல் காவல்துறையினர் தடுக்க வேண் டும் என விஜயகாந்த், கி.வீரமணி, இரா.முத்தரசன் ஆகியோர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கடந்த 2 நாள் களாக நடைபெற்று வரும் போராட்டங்கள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜனநாயக நாட்டில் அனை வருக்கும் பேச்சுரிமையும், கருத் துரிமையும் உள்ளது. தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் காவல்துறையினர் தடுக்க வேண் டும். போராடும் அதிமுக தொண்டர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அமைதிப்படுத்த வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்த கருத்தை மையப்படுத்தி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். வன்முறையில் இறங்குபவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

இளங்கோவனின் கருத்து அதிமுகவினரின் மனதை காயப்படுத்தியிருந்தால் ஜனநாயக வழியில் கண்டனம் தெரிவிக்கலாம். அதற்கு மாறாக காங்கிரஸ் அலுவலகம், மற்றும் இளங்கோவன் வீடு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது சரியான வழிமுறை அல்ல. ஊடகங்கள் மீது வழக்கு தொடர்வது கருத்துரிமைக்கு எதிரானதாகும். போராட்டங்கள் வன்முறையாக மாறாமல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x