Last Updated : 27 Apr, 2020 04:27 PM

 

Published : 27 Apr 2020 04:27 PM
Last Updated : 27 Apr 2020 04:27 PM

விருதுநகரில் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அதிமுகவினர் தாக்கியதாகக் கூறி அம்மா உணவகப் பெண் ஊழியர்கள் இன்று உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் 8 அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்குவதற்காக அதற்கான தொகையை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கியுள்ளார்.

அதையடுத்து, அம்மா உணவகங்களில் பொதுமக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அம்மா உணவகங்களில் யாருக்கும் பார்சல் கொடுக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், ராஜபாளையத்தில் உள்ள அம்மா உணவகத்தில் உணவுகள் பார்சல் செய்யப்பட்டுள்ளது. இதையறிந்த நகர ஜெயலலிதா பேரவை செயலர் முருகேசன் தனது ஆதரவாளர்களுன் சென்று பார்சல் போடுவதை நிறுத்துமாறு ஊழியர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், நகராட்சி கணக்கெடுப்புப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு இப்பார்சல் கொடுப்பட உள்ளாக அங்கு வந்த அதிமுக நகரச் செயலர் பாஸ்கரன் கூறியுள்ளார்.

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டதாகவும், அதில், அம்மா உணவக ஊழியர்கள் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து அம்மா உணவக பெண் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நகராட்சி அலுவலர்கள் சமாதானம் செய்ததையடுத்து பெண் ஊழியர்கள் பணிக்குத் திரும்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x