Published : 24 Apr 2020 07:21 AM
Last Updated : 24 Apr 2020 07:21 AM

கிராமப்புறங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் நிபந்தனைகளுடன் தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி: 10 வகை ஆலைகளில் பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் அரசாணை வெளியீடு

தமிழகத்தில் கிராமப்புறங்கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதி களில் மத்திய, மாநில அரசு அலு வலகங்கள் 33 சதவீதம் ஊழியர் களுடன் இயங்கவும், நூறு நாள் வேலைத்திட்ட பணிகள் நடைபெற வும் அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழு வதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த நிலையில், கடந்த ஏப்.15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அப்போது, கரோனா பாதிப்பு குறை வான பகுதிகளில், கட்டுப்பாடு களுடன் ஊரடங்கை தளர்த்துவது மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது குறித்து வழிகாட்டு தல்கள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தொழிற்சாலைகள் இயக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு தனது பரிந்துரையை கடந்த ஏப்.20-ம் தேதி முதல்வரிடம் வழங்கியது. தொடர்ந்து அன்று நடைபெற்ற மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத் தில் பரிந்துரைகள் குறித்து விவா திக்கப்பட்டது. இதையடுத்து, மே 3-ம் தேதி வரை ஊரடங்கில் தளர்வு கிடையாது என்றும் கிராமப்புறங் கள் மற்றும் கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் எந்த தளர்வுகளையும் அனுமதிப்பதில்லை என்றும் முடி வெடுக்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள் துறை அமைச்சகத்தின் திருத்திய வழிகாட்டுதல்கள் அடிப்படையில், கட்டுப்படுத்தப்படாத பகுதிகளில் சில குறிப்பிட்ட பணிகளை மேற் கொள்ள அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் பரிந்துரைத்தார். அந்த பரிந்துரையை பரிசீலித்த தமிழக அரசு, குறிப்பிட்ட பணிகளை அனு மதித்து அரசாணை பிறப்பித்து உள்ளது.

இதுதொடர்பாக தலைமைச் செயலர் கே.சண்முகம் வெளி யிட்ட அரசாணையில் கூறியிருப்ப தாவது:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் (100 நாள் வேலை திட்டம்), கிராமங்களில் கட்டுப்பாடு மற்றும் சிவப்பு மண்டலமாக குறிப்பிடப் படாத பகுதிகளில் நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளலாம். மேலும், அப் பணிகளுக்கு வழக்கமான பணி யாளர்களில் மூன்றில் ஒரு பங்கு அல்லது தேவையான பணி யாளர்களை உரிய சமூக இடை வெளியை பின்பற்றி பணியாற்ற அனுமதிக்கலாம்.

நீர்ப்பாசனத் திட்டத்தின்கீழ் கிராமங்களில் நடைபெறும் தடுப் பணைகள் உள்ளிட்ட கட்டுமான பணிகள், குளங்கள் அல்லது கால் வாய்களை தூர்வாருதல், அணை பாதுகாப்பு, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனைகளுக்காக நடை பெற்று வரும் கட்டுமானம், பரா மரிப்புப் பணிகள், சாலைகள், பாலங்கள், குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதாரப் பணிகள், செங்கல் சூளைகள், தேவை அடிப் படையில் கோரப்படும் ஹார்டு வேர் தளவாட பொருட்கள் விநி யோகித்தல், மின் உற்பத்தி, தொட ரமைப்பு மற்றும் பகிர்மானம் தொடர் பான பணிகள் நடைபெறவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

இதுதவிர மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் அவசர பணி களுக்காக இயங்கவும் அனுமதிக் கப்படுகிறது.

இந்தப் பணிகளை தொடங்க அனுமதிக்கும் நிலையில், அனைத்து முன்னேற்பாடுகளும் குறிப்பாக அலுவலகங்கள், பணி யிடங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களில் சமூக விலகல் உள்ளிட்ட உரிய நிலையான இயக்க வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

ஆலைகளில் பராமரிப்பு பணி

இதனிடையே, தமிழகத்தில் எந்தெந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதிப்பது என்பது குறித்து பிறப்பிக்கப்பட்ட அர சாணையில் கூறியிருப்பதாவது:

பல்வேறு தொழிற்சாலைகளின் கோரிக்கைகள் அடிப்படையில், தொடர் இயக்கத்தில் இருக்க வேண்டிய தொழிற்சாலைகளாக, எண்ணெய் சுத்திகரிப்பு, மிகப் பெரிய இரும்பு ஆலைகள் (டிஎம்டி கம்பிகள் தயாரிக்கும் நிறுவனங் கள்), மிகப்பெரிய சிமென்ட் ஆலைகள், பெயின்ட் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் ரசா யன ஆலைகள், சர்க்கரை ஆலை கள், உரத்தயாரிப்பு தொழிற்சாலை கள், கண்ணாடி ஆலைகள், உலோகவியல் ஆலைகள், டயர் தயாரிப்பு தொழிற்சாலைகள், மிகப் பெரிய காகித ஆலைகள் ஆகிய 10 ஆலைகள் கண்டறியப்பட்டுள்ளன.

தற்போது மூடப்பட்டுள்ள இது போன்ற ஆலைகளில் தேவையான பணியாளர்களைக் கொண்டு அத்தியாவசியமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் இயந்திரங்களின் பாதுகாப்பு மற்றும் நிறுவுதல் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு 13 வகையான தொழிற்சாலைகளுக்கு இதுபோன்ற அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டது. அதன் பின், அன்றே அந்த அரசாணை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலை யில், அதில் 10 நிறுவனங் களுக்கு தற்போது அனுமதி அளிக் கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதியோர் இல்லங்கள் இயங்கலாம்

மத்திய உள்துறையின் அறிவுறுத்தல்படி பேரிடர் மேலாண்மை சட்டத்தில் சில திருத்தங்களை செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியோர், மூத்த குடிமக்கள், ஆதரவற்றோர், பெண்கள், விதவைகள், முதியோர்களை கவனிப்போருக்கான இல்லங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் உள்ள அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், தயாரிப்பு, உள்ளூர் கடைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லுதல், பெரிய அளவிலான செங்கல் தயாரிப்பு, பால் பதப்படுத்துதல், ரொட்டி தயாரித்தல் உள்ளிட்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், மாவு மற்றும் பருப்பு ஆலைகள் ஆகியவை அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர தோட்டக்கலை, வேளாண்மை ஆராய்ச்சி பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x