Published : 22 Apr 2020 07:08 AM
Last Updated : 22 Apr 2020 07:08 AM

கரோனா தடுப்பு, நிவாரணப் பணிகளுக்கு இதுவரை ரூ.161 கோடி நிதி சேர்ந்துள்ளது: தமிழக அரசு அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 வரப் பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டசெய்திக்குறிப்பு:

தமிழகத்தில் கரோனா பரவ லைத் தடுக்க பல்வேறு நோய்த் தடுப்பு பணிகள், நிவாரணப் பணி களை போர்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது.

இப்பணிகளுக்காக முதல்வரின்பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வரை ரூ.134 கோடியே 63 லட்சத்து 54 ஆயிரத்து 364 நிதி வரப் பெற்றது.

இதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்.14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 7 நாட்களில், தமிழக அரசுஇ-பேமென்ட் வழியாக ரூ.97 லட்சத்து 65 ஆயிரம், தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ரூ.77 லட்சத்து 30 ஆயிரத்து 543, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ரூ.64 லட்சத்து 74 ஆயிரத்து 752 என பல்வேறு தரப்பினரிடம் இருந்து ரூ.26 கோடியே 30 லட்சத்து 20 ஆயிரத்து 208 வரப் பெற்றுள்ளது.

இதுவரை பெறப்பட்ட மொத்த தொகை ரூ.160 கோடியே 93 லட்சத்து 74 ஆயிரத்து 572 ஆகும்.

நிவாரணம் அளித்த நிறுவனங்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x