Published : 20 Apr 2020 03:09 PM
Last Updated : 20 Apr 2020 03:09 PM

பதிவு செய்ய மக்கள் வராததால் திண்டுக்கல் மாவட்டத்தில் வெறிச்சோடிய பத்திரப்பதிவு அலுவலகங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இன்று முதல் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியபோதும், மக்கள் யாரும் வராததால் வெறிச்சோடிக் காணப்பட்டது.

ஊரடங்கு காரணமாக பத்திரபதிவு அலுவலகங்கள் சில வாரங்கள் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் ஏப்ரல் 20 முதல் பத்திரபதிவு அலுவலகங்கள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று பத்திரவு பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு அலுவலர்கள் பணிக்கு வந்திருந்தனர். அலுவலத்திற்குள் வருபவர்கள் சோப்பு நீரில் கையைக் கழுவிவிட்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் பத்திரங்களை பதிவு செய்ய பொதுமக்கள் யாரும் வரவில்லை. இதனால் திண்டுக்கல், பழநி, வத்தலகுண்டு நகரங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடிக்காணப்பட்டன.

முன்னதாக திண்டுக்கல் மாவட்ட ரியஸ் எஸ்டேட் உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில்:

தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பத்திரப்பதிவு அலுவலங்களை திறக்க உத்தரவிட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், பத்திரப்பதிவு அலுவலங்கங்கள் பல இடங்களில் குறுகிய கட்டிடங்களில் தான் செயல்படுகிறது.

சமூக இடைவெளியை கைடைப்பிடிப்பது சிரமம், எனவே ஊரடங்கு முழுமையாக தளர்வு செய்யப்பட்டபிறகு பத்திரப் பதிவு அலுவலகங்களை திறக்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் வராததால் பதிவுகள் இன்றி பத்திரப்பதிவு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x