Last Updated : 12 Apr, 2020 08:06 AM

 

Published : 12 Apr 2020 08:06 AM
Last Updated : 12 Apr 2020 08:06 AM

ஊரடங்கால் பணத்தேவையை சமாளிக்க பி.எப் மூலம் ரூ.279.65 கோடி பெற்ற சந்தாதாரர்கள்

மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலக மண்டல ஆணையாளர் ந.கோபால கிருஷ்ணன் கூறியதாவது:

கரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால், வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் உடனடி பணத்தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் அவர்களின் 3 மாத சம்பளத் தொகை அல்லது வருங்கால வைப்பு நிதியில் அவர்களின் கணக்கில் இருக்கும் பணத்தில் 75 சதவீதம் இதில் எது குறைவாக உள்ளதோ அதை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இப்பணத்தைப் பெற இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம். 3 நாட்களுக்குள் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் வரவு வைக்கப்படும்.

இதுவரை நாடு முழுவதும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்த 1.37 லட்சம் சந்தாதாரர்களின் வங்கிக் கணக்கில் ரூ.279.65 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

மதுரை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்துக்கு உட்பட்ட மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங் களைச் சேர்ந்த 1,300 சந்தா தாரர்கள் முன்பணம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் வங்கிக் கணக்கில் ரூ.2.4 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x