Published : 17 Aug 2015 08:39 AM
Last Updated : 17 Aug 2015 08:39 AM

எம்பிஏ மாணவர் சேர்க்கை: இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ‘சிமேட்’ நுழைவுத் தேர்வு - அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் திடீர் முடிவு

எம்பிஏ மாணவர் சேர்க்கைக் கான ‘சிமேட்’ பொது நுழைவுத் தேர்வை இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்துவ தென்று அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

தேசிய அளவில் புகழ்பெற்ற நிர்வாகவியல் கல்வி நிறுவனங்களாகக் கருதப்படும் ஐ.ஐ.எம். கல்லூரிகளில் எம்பிஏ படிப்பில் சேருவதற்கு ‘கேட்’ எனப்படும் பொது நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.

இதேபோல், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும், தனியார் சுயநிதி கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு எம்பிஏ படிப்பில் சேர வேண்டுமானால் அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகின்ற ‘டான்செட்’ பொது நுழைவுத் தேர்வை எழுதியிருக்க வேண்டும்.

இதேபோன்று தேசிய அளவில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அதிகார வரம்புக்கு உட்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரி களில் எம்பிஏ சேருவதற்கு ‘சிமேட்’ எனப்படும் பொது நிர்வாக நுழைவுத் தேர்வு (Common Management Admission Test-CMAT) எழுத வேண்டியது அவசியம்.

இந்த ஆன்லைன் வழி நுழைவுத் தேர்வை ஏஐசிடிஇ ஆண்டுக்கு 2 முறை அதாவது பிப்ரவரி, செப்டம்பர் மாதங்களில் நடத்தி வந்தது.

இந்த நிலையில், அடுத்த கல்வி ஆண்டில் இருந்து (2016-17) ‘சிமேட்’ நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே ஆன்லைனில் நடத்துவதென்று ஏஐசிடிஇ திடீரென முடிவுசெய்துள்ளது. ஏற்கெனவே ‘சிமேட்’ தேர்வு நடத்தப்படும் மாதங்களான பிப்ரவரி, செப்டம்பர் மாதத்தில் இல்லாமல் ஆண்டின் தொடக்க மான ஜனவரி மாதத்தில் இந்த தேர்வு நடத்தப்பட உள்ளது.

‘சிமேட்’ நுழைவுத் தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வந்ததால் ஒரு தேர்வில் மதிப் பெண் குறைந்துபோனாலும் அடுத்து வரும் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று எம்பிஏ படிப்பில் சேர்ந்துவிட முடியும்.

இனிமேல் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தேர்வு மட்டும் நடத்தப்பட்டால் போட்டி கடுமை யாக இருக்கும் என்று எம்பிஏ சேர விரும்பும் இளம் பட்டதாரிகள் கவலை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x