Published : 05 Apr 2020 07:40 AM
Last Updated : 05 Apr 2020 07:40 AM

தருமபுரி மாவட்ட மலைக் கிராமங்களுக்கு கழுதைகள் மீது சென்ற ரேஷன் பொருட்கள்

தருமபுரி மாவட்டத்தில் சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கழுதைகள் மீது ஏற்றிச் செல்லப்பட்டது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சியில் உள்ள கோட்டூர் மலை, ஏரிமலை ஆகிய மலைக் கிராமங்களுக்கு இதுவரை சாலை வசதி இல்லை. கோட்டூர் மலை யில் சுமார் 200 குடும்பங்களும், ஏரி மலையில் அலகட்டு கிராம மக்களை யும் சேர்த்து சுமார் 300 குடும்பங்களும் ரேஷன் பொருட்களை பெறுகின்றனர்.

இவர்களுக்கான ரேஷன் பொருட் கள் மாதம்தோறும் கழுதைகள் மீது ஏற்றப்பட்டு மலைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. ஊரடங்கு நடைமுறையில் உள்ள சூழ லில் மலைக் கிராம மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் முறையாக சென்று சேர்வதை ஆய்வின் மூலம் உறுதி செய்ய வேண்டும் என தரும புரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தர விட்டார்.

அதன்படி, கோட்டூர் மலை அடிவாரத் திலும், ஏரிமலைக்கு செல்லும் சீங்காடு அடிவாரத்திலும் வருவாய் மற்றும் வழங் கல் துறை அலுவலர்கள் முன்னிலை யில் கழுதைகள் மீது ரேஷன் பொருட் கள் ஏற்றப்பட்டு மலைக் கிராம விநி யோகத்துக்காக அனுப்பி வைக்கப் பட்டன. இரு மலை கிராமங்களும் தரைத் தளத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x