Published : 01 Apr 2020 08:02 AM
Last Updated : 01 Apr 2020 08:02 AM

கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ‘பாரா கிளைடர்’ மூலம் கிருமிநாசினி மருந்து தெளிப்பு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தமிழகத்தில் முதல்முறையாக `பாரா கிளைடர்' மூலம் பொள்ளாச்சி நகராட்சிப் பகுதியில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள கடந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம், சிறிய ரக பாரா கிளைடரை வடிமைத்துள்ளார். இதைப் பயன்படுத்தி அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மருந்து தெளித்து வந்துள்ளார். இதையறிந்த தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் கிருமிநாசினி மருந்து தெளிக்க பாரா கிளைடரைப் பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, பொள்ளாச்சி ஜெயராமன், துணை ஆட்சியர் வைத்திநாதன், டிஎஸ்பி சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில், பாரா கிளைடர் ஓட்டுநர்கள் ஞானப்பிரகாசம், ஜெயநிரஞ்சன், சஞ்சய்ராஜ் ஆகியோர், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலிருந்து நேற்று காலை பாரா கிளைடரில் கிளம்பி, நகரப் பகுதிகளின் மேல் 50 அடி முதல் 100 அடி உயரத்தில் பறந்து கிருமிநாசினி மருந்து தெளித்தனர். இனி தினமும் காலை 6 மணி முதல் 8 மணி வரையும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் பாரா கிளைடர் மூலம் வானில் பறந்து, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x