Published : 31 Mar 2020 07:09 AM
Last Updated : 31 Mar 2020 07:09 AM

கரோனாவில் இருந்து யார் காப்பார்?

“கரோனாவில் இருந்து நம்மை யார் காப்பார்கள் டாக்டர்?” - இப்படி என்னை தொலைபேசியில் அழைத்துக் கேட்டவர் வழக்கமாக சிகிச்சைக்கு வருபவர் மட்டுமல்ல, குடும்ப நண்பரும் கூட.

யார் காக்க முடியும் ? ஆனானப்பட்ட வல்லரசுகளே என்ன செய்வது என்று திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நிலைமையின் தீவிரத்தை உணராமல் மருத்துவரும், மருந்தும், மருத்துவமனைகளும் காப்பாற்றிவிடும் என அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். உண்மையில் நம்மை நாம்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும். நம்மை தனிமைப்படுத்திக் கொள்வது ஒன்றே சிறந்தது. இதுதான் நோயின் சமூக பரவல் சாத்தியப்பாட்டைத் தணிக்கும்.

நாட்டில் எத்தனை மருத்துவமனைகள் உள்ளன, தீவிர சிகிச்சை படுக்கைகள் எத்தனை, வென்ட்டிலேட்டர் எத்தனை, சிறப்புமருத்துவர்கள் எத்தனை பேர்என்ற கணக்குகளை ஊடகங்கள் விவாதிக்கின்றன. ஆனால் முக்கியமான உண்மை என்னவெனில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் பாதிப்புற்று மருத்துவமனைகளை நாடிச் சென்றால், அத்தனை விரைவாக அவர்கள் அனைவரையும் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு உண்டா என்பது கேள்விக்குறி.

முழு மொத்த அடைப்பு என்பதை மிக தாமதமாகவே அரசு அறிவித்தது. அதுவும் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத சூழல் பல முக்கிய நகரங்களில், சிற்றூர்களில் நிலவுகிறது. நாம் இருக்கும் இந்தக் கட்டத்தில், இதையொட்டி மேலும் சில கேள்விகள் தவிர்க்க முடியாமல் எழுகின்றன:

1. நோய் மூன்றாம் கட்டத்துக்கு ஒன்றே சிறந்தது. இதுகு செல்வதை நம்மால் தடுக்கமுடியாது. அதை தாமதப்படுத்துவதும் மற்றும் வேகத்தை மட்டுப்படுத்தவும் மட்டுமே முடியும். அந்த அளவுக்குத் தயாராக இருக்கிறோமா?

2. தென் கொரியாவைப் போலபெரிய அளவில் பரிசோதனைகள் இல்லாதபோது நோயாளிகளின் எண்ணிக்கையை நிச்சயம் துல்லியமாகக் கூறமுடியாது. சோதனை மையங்களை அதிகரிக்க வேண்டாமா?

3. நிலைமை மோசமாகும்போது குறைந்த தொற்று மற்றும் நோய் அறிகுறிகள் உள்ளவர்களை வீட்டிலேயே பராமரிக்க, வீட்டில்உள்ளவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும். இதை அரசு இயந்திரம் உணர்ந்து உள்ளதா?

4. மாற்று மருத்துவ முறைகளில் தடுப்பு மருந்துகள் உள்ளன என 'ஆயுஷ் அமைச்சகம்' அறிவித்த பின்னரும், அதைப் பெரிய அளவில் பயன்படுத்த தயங்குவது ஏன்?

5. மாவட்ட அளவில் அல்லது பகுதிஅளவில் மாற்று மருத்துவ முறை மருந்துகளை பரிசோதனை முயற்சியாக பயன்படுத்தத் தயங்குவது ஏன்?

6. இந்நோய்க்கு சீனத்தில் பாரம்பரிய மருந்துகள் பெரும்பாலானவர்களுக்குப் பயன்படுத்தியது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தி இருப்பது தெரிந்த பின்னரும், இந்தியாவில் ஏன் இதை நடைமுறைப்படுத்தக் கூடாது?

ஹோமியோபதி மருத்துவத்தில் இதற்கு முன் கொள்ளை நோய்களை வெற்றிகொண்ட வரலாறுஉள்ளது. நமது நாட்டில், மூளைக்காய்ச்சல் பரவியபோது ஹோமி யோபதி மருந்துகள் ஆற்றிய சேவை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சிக்குன்குனியா என்ற புதிய பிரச்சினை முளைத்தபோது, மாற்று மருத்துவமான ஹோமி யோபதி மருந்துகள் மட்டுமே நோயாளிகளுக்கு உகந்த நிவார ணத்தை வழங்கியது அண்மைக் கால வரலாறு.

ஹோமியோபதி மருத்துவம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பை வலுவாக்கி நம்மைக் காக்கிறது. கரோனா குறித்த பேரச்சம் மட்டுமே அதிகம் புழங்கும் பொதுவெளியில் நம்பிக்கை விதைக்கக்கூட மாற்றுமருத்துவ முறைகளை அரசு பயன்படுத்த முன்வருவது அவசியமானது.

இந்த நோய் வெளியில் மோசமாகத் தெரிந்தாலும் 80 விழுக்காடு நோயாளர்களை எதுவும் செய்யாது என்கிறார் சென்னை அப்போலோ மருத்துவமனையின் தொற்று நோயியல் துறை நிபுணர் - மருத்துவர் ராம சுப்ரமணியன். மேலும் அவர்களுக்கு வாழ்நாள் நோய் எதிர்ப்பு சக்தியை அதுவழங்குமாம் . ஆனால் குணமடைவதற்கு முன்பு நோயாளர்கள் மற்றவர்களுக்கு நோய் பரப்பும் சாத்தியம் மிக அதிகம்.

மீதமுள்ள 20 விழுக்காடு நோயாளர்களைக் குறுகிய காலத்தில் சமாளிக்கும் திறன் நமது மருத்துவக் கட்டமைப்புக்கு இல்லை என் பதையும் இந்த நேரத்தில் நினைவு கொள்ள வேண்டும்.

என்னை அழைத்த நண்பருக்கு இப்படி என் பதிலைச் சொன்னேன்: “கவலைப்படாதீர்கள்.. கரோனா நம்மைக் காக்கும்.''

-கட்டுரையாளர், ஹோமியோபதி மருத்துவர் மின்னஞ்சல் முகவரி:drpvvmd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x