Last Updated : 19 Mar, 2020 09:15 AM

 

Published : 19 Mar 2020 09:15 AM
Last Updated : 19 Mar 2020 09:15 AM

வாகனத் தணிக்கையில் பிரத்யேக செயலியின் பயன்பாட்டை தீவிரப்படுத்திய போலீஸ்

கோவை மாநகரில் வாகனத் தணிக்கையின்போது, திருட்டு வாகனங்கள், போலி பதிவெண் கொண்டவாகனங்களைக் கண்டறிய பிரத்யேக செயலியின் பயன்பாட்டை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இதனால் கடந்த ஒரேவாரத்தில் 100 திருட்டு வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் கடந்த ஆண்டு மட்டும் நிகழ்ந்த 1,057 சாலைவிபத்துகளில், 132 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டு ஜனவரி முதல் கடந்த 16-ம் தேதி வரை 17 பேர்உயிரிழந்துள்ளனர். இதைத் தடுக்கும் வகையில் போக்குவரத்து காவல்துறையினர் முக்கிய இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொண்டு, விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர்.

மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது, ‘முன்பு வாகனச் சோத னையின்போது, விசாரணைக்கு பின்னரே, திருட்டு வாகனங்களில் வந்தவர்கள் பிடிபடுவர். தற்போது வாகனச் சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து காவல்துறையினர், மத்திய அரசின் இ-பரிவாகன் செயலி மற்றும் இ-பரிவாகன் இணையதளத்தின் லிங்க் ஆகியவற்றை செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்து கின்றனர். சோதனையில் பிடிக்கப்படும் வாகனங்களின் எண்ணை இந்த செயலியில் பதிவிட்டால், அடுத்த நொடியில் அந்த வாகனத்தின் பெயர், மாடல், வர்ணம், உரிமையாளர் பெயர், விவரம், காப்பீடு விவரம் உள்ளிட்ட அனைத்தும் தெரிந்துவிடும். வாகனத் தணிக்கையின் போது, ஒரு காவலர் இந்தப் பணியைபிரத்யேகமாக மேற்கொள்கிறார். செயலியில் வரும் வாகனத்தின் அடையாள விவரமும், நேரில் பார்க்கும் வாகனத்தின் அடையாளமும் மாறியிருந்தால், வாகன ஓட்டியிடம் போலீஸார் உரிய முறையில் விசாரிப்பார்கள். மாநகரில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக வாகனத்தணிக்கையின்போது இச்செயலியின் பயன்பாட்டை போலீஸார் தீவிரப்படுத்தி உள்ளனர், என்றனர்.

மாநகர காவல்துறையின் துணை ஆணையர் (போக்கு வரத்து) முத்தரசு கூறும்போது, ‘மாநகரில் எம்பாிவாகன், கார் இன்போ உள்ளிட்ட பிரத்யேக செயலிகளின் பயன்பாட்டை வாகனச் சோதனையின்போது தீவிரமாக்கியுள்ளோம். இதனால் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் போலி பதிவெண் பயன்படுத்தியது, திருடப்பட்டது என 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x