Published : 02 Mar 2020 08:28 AM
Last Updated : 02 Mar 2020 08:28 AM

திருச்சி மாவட்ட திமுகவில் புதிய நிர்வாகிகளுக்கு ‘வழி விட்டார்’ நேரு

திருச்சி மாவட்ட திமுகவில் கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து மாவட்டச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்தி ருந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாவட்டத்தை வடக்கு, தெற்கு என இரண்டாக பிரித்தபோது தெற்கு மாவட்ட திமுக செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார். வடக்கு மாவட் டத்துக்கு காடுவெட்டி ந.தியா கராஜன் நியமிக்கப்பட்டபோதிலும், அந்த மாவட்டத்தின் செயல்பாடு களும் கே.என்.நேருவின் கட்டுப் பாட்டிலேயே இருந்தன.

புதிய நிர்வாகிகள் நியமனம்

இந்த சூழலில் திமுகவின் முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு கடந்த மாதம் நியமிக்கப்பட்டதால், திருச்சி மாவட்ட திமுக மூன்றாக பிரிக்கப் பட்டது. வடக்கு மாவட்டச் செயலாளராக காடுவெட்டி ந.தியாகராஜன், தெற்கு மாவட்ட பொறுப்பாளராக அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளராக வைரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். எனினும், திருச்சி மாவட்ட திமுகவை மீண்டும் தனது நேரடி கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள முயற்சிப்பார் என கட்சியினர் மத்தியில் பேச்சுக்கள் எழுந்தன. அதற்கு வலுசேர்க்கும் வகையில் அவரது மகன் அருண் நேரு, பொது நிகழ்ச்சிகளுக்கும் செல்லத் தொடங்கினார்.

மாநில அரசியலில் கவனம்

இந்த சூழலில் கடந்த வாரம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு, புதிய நிர்வாகிகள் பாரபட்சம் காட்டாமல் திறம்பட செயல்பட வேண்டும். கட்சியினர் அனைவரும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கூறினார். அத்துடன், மாவட்டச் செயலா ளர்கள் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்டம் வாரியாக தனித்தனியாக செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். கே.என்.நேருவின் இந்த பேச்சு, அவர் திருச்சி அரசி யலை புதிய நிர்வாகிகளிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னையிலி ருந்தபடி இனி மாநில அரசியலில் கவனம் செலுத்தப் போகிறார் என்பதை வெளிக்காட்டும் வகை யில் இருந்ததாக கட்சியினர் கருதினர்.

வழியனுப்பிய கே.என்.நேரு

அதன்படியே தற்போது, காட்சி களும் அரங்கேறி உள்ளன. கே.என்.நேரு இல்லாமல் ஒன்றியம், பகுதி வாரியாக அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள், மாந கரச் செயலாளர் பெயர்களில் தனித்தனி அறிக்கைகளும் வெளி யிடப்படுகின்றன. இந்த சூழலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான நேற்று, கலைஞர் அறிவாலயத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கே.என்.நேருதான் கொடியேற்றுவார். ஆனால் நேற்று அவர் ஒதுங்கிக் கொண்டு, மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன் ஆகியோரை கொடி யேற்ற வழியனுப்பி வைத்தார்.

அதேபோல, பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் கே.என்.நேரு வழக்கத்துக்கு மாறாக தொண்டர்களுடன் சேர்ந்து கீழேயே நின்று கொண்டார்.

மக்களிடம் நம்பிக்கை அதிகரிக்கும்

இந்த மாற்றங்கள் குறித்து திமுக நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘கே.என்.நேரு பெரும் பாலும் சென்னையிலேயே இருக்க வேண்டியுள்ளதால், இங்குள்ள மாவட்ட நிர்வாகிகள் ஒவ்வொரு விஷயத்திலும் அவரது கருத்தை அறிய காத்திருக்காமல், சுதந்தி ரமாக செயல்படுமாறு அறிவுறுத்தப் பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகிகள் தனித்துவமாக செயல்படும்போது, பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரர் களிடம் அவர்கள் மீதான மதிப்பும், நம்பிக்கையும் வளரும். தேர்த லின்போது இது கைகொடுக் கும். வரக்கூடிய சட்டப் பேரவைத் தேர்தலில் திருச்சி மாவட்டத் திலுள்ள 9 தொகுதிகளிலும் பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் வகையில் செயல்பாடு இருக்க வேண்டும் என புதிய நிர்வாகிகளிடம் கே.என்.நேரு கூறியுள்ளார்' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x