Published : 04 Aug 2015 04:12 PM
Last Updated : 04 Aug 2015 04:12 PM

மதுவிலக்கு போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க முத்தரசன் வலியுறுத்தல்

மதுவிலக்கு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதுடன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள், ஆலயங்கள், மக்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள (டாஸ்மாக்) அரசு மது கடைகளை அகற்ற கோரியும், தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமுல்படுத்த கோரியும். காந்தியவாதி சசிபெருமாள் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, ஆகிய அரசியல் கட்சிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்க்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்தன.

இந்நிலையில் தமிழக அரசு போராட்டத்தை ஒடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று கூறி பலரை சிறையில் அடைத்துள்ளது.

04.08.2015 அன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்களை, தமிழக காவல்துறை கைது செய்துள்ளது. இவையாவும் கண்டனத்துகுரியது.

தமிழகத்தில் மதுவிற்க்கு எதிரான மிக இயல்பான இப்போராட்டத்தை மக்கள் நல அரசு எனகூறும் தமிழக அரசு அணுகும் விதம் ஏற்புடையதல்ல. மாணவர் போராட்டத்தை தடி கொண்டு தாக்குவதும், அமைச்சர்கள் மூலம் கண்ணியமற்ற அறிக்கை விடுவதும் நல்ல ஜனநாயக அணுகுமறை அல்ல என்று எச்சரிக்குறோம்.

தமிழக அரசு தமிழகம் மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து மதுவிலக்கு கொள்கையில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதோடு தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதுடன் அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x