Published : 12 Feb 2020 09:35 PM
Last Updated : 12 Feb 2020 09:35 PM

ஐஏஎஸ்-ஐபிஎஸ் சிவில் தேர்வு 2020 அறிவிப்பு: எப்படி விண்ணப்பிப்பது?

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற ஆட்சிப் பணித் தேர்வுகளுக்கான முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய ஆட்சிப்பணிக்கான மத்திய தேர்வு ஆணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகள் 2020 ஆம் ஆண்டிற்கான முதல்நிலைத் தேர்வுக்கான (prelims exam) அறிவிப்பு வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் 3-ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள். தேர்வுத்தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் மே-31 அன்று தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்வுக்கு 3 வாரம் முன் ஹால் டிக்கெட் விண்ணப்பித்த அதே இணையதளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2020-ம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு (பிப்ரவரி 12 )இன்று வெளியானது. மார்ச் 03 2020- மாலை 6 மணிக்குள் தேர்வர்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் செலுத்தவேண்டும். இதற்கான தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்பு இருக்கவேண்டும். 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் https://upsconline.nic.in என்ற பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மொத்தம் 22 வகை ஆட்சிப் பணி படிப்புகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் தேர்வு மையங்கள்:

முதல் நிலைத்தேர்வுக்கு தமிழகத்தில் சென்னை, வேலூர், மதுரை, கோவை, திருச்சி ஆகிய ஐந்து மையங்களும் புதுவையில் ஒரு மையமும் உண்டு (இதில் முதலில் விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் கேட்கும் மையம் ஒதுக்கப்படும்).

i) Indian Administrative Service.(IAS)
(ii) Indian Foreign Service.(IFS)
(iii) Indian Police Service.(IPS)
(iv) Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.
(v) Indian Audit and Accounts Service, Group ‘A’.
(vi) Indian Revenue Service (Customs and Central Excise), Group ‘A’.
(vii) Indian Defence Accounts Service, Group ‘A’.
(viii) Indian Revenue Service (I.T.), Group ‘A’.
(ix) Indian Ordnance Factories Service, Group ‘A’ (Assistant Works Manager, Administration).
(x) Indian Postal Service, Group ‘A’.
(xi) Indian Civil Accounts Service, Group ‘A’.
(xii) Indian Railway Traffic Service, Group ‘A’.
(xiii) Indian Railway Accounts Service, Group 'A'.
(xiv) Indian Railway Personnel Service, Group ‘A’.
(xv) Post of Assistant Security Commissioner in Railway Protection Force, Group ‘A’
(xvi) Indian Defence Estates Service, Group ‘A’.
(xvii) Indian Information Service (Junior Grade), Group ‘A’.
(xviii) Indian Trade Service, Group 'A'.
(xix) Indian Corporate Law Service, Group ‘A’.
(xx) Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade).
(xxi) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group 'B'.
(xxii) Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli

முதல்நிலைத் தேர்வு சிலபஸ்:

யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வானது இரண்டு தாள் பொது அறிவு (general knowledge) மற்றும் ஆப்ஸ் என அழைக்கப்படும் சி சாட் பகுதியினைக் கொண்டது. காலையில் பொது அறிவுத் தாளானது 100 கேள்விகளுடன் ஒரு கேள்விக்கு 2 மதிபெண்கள் வீதம் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் தவறான பதில்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும். முதன்மைத் தேர்வில் பொது அறிவுத்தாளின் தேர்வு நேரம் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 12 மணிக்கு முடியும்.

சிசாட் தாள் ஆப்ஸ் என அழைக்கப்படும் திறனாய்வு, லாஜிக்கல், ஆங்கிலம், காம்பிரிகென்சன், முடிவெடுக்கும் திறன் ஒருங்கே இணைந்து 100 கேள்விகளைக் கொண்டது, மொத்தம் 200 மதிப்பெண்கள் கொண்ட சிசாட் தாள் மதியம் 2 மணிக்குத் தொடங்கி 4 மணிக்கு முடியும். இதில் 33% சதவீதம் எடுத்தால் பாஸ். இதிலும் தவறான பதில்களுக்கு 2 மதிப்பெண்கள் குறைக்கப்படும்.

முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு:

சிவில் சர்வீஸ் தேர்வில் நெகடிவ் மதிபெண்கள் உள்ளன. முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோர்கள் மெயின் தேர்வு எழுத தகுதிப் படைத்தவர்கள் ஆவார்கள் மெயின்ஸ் தேர்வு மொழித்தாளுடன் 9 தாள்களை கொண்டது.

மேலும் அவற்றில் வெற்றி பெறுவோர்கள் நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் அதனையடுத்து நேரடி தேர்வில் அதிக கட் ஆப்களுடன் தேர்ச்சி பெறுவோர்களுக்கு தரவரிசை ஒதுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x