Published : 12 Feb 2020 09:37 AM
Last Updated : 12 Feb 2020 09:37 AM

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் பிப்.26-ம் தேதி சென்னையில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு மாநாடு: கேரளா, புதுச்சேரி முதல்வர்களை அழைக்க திட்டம்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடைசார்பில் சென்னையில் வரும் 26-ம் தேதி குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாநாடு நடத்தப்படுகிறது. இதில் கேரளா, புதுச்சேரி முதல்வர்களை அழைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் செயற்பாட்டுக் குழுகூட்டம் பஷீர் முகமது தலை மையில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் மாநில ஒருங் கிணைப்பாளர்கள் அருணன், க.உதயகுமார், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, கல்வியா ளர் தாவூத் மியாகான், மத்திய அரசு ஊழியர் சங்கத் தலைவர் எம்.துரைப்பாண்டியன், இந்திய சமூக அறிவியல் கழகத்தின் ஞானகுரு, பத்திரிகையாளர்கள் பன்னீர்செல்வம், முகமது அமீன், அ.குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அருணன், உதயகுமார் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசியகுடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 30-ம் தேதி நடத்தப்பட்ட மனிதசங்கிலி போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. திரளான மக்கள் அதில் பங்கேற் றனர்.

அதன் தொடர்ச்சியாக, குடி யுரிமைச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் வரும் 26-ம்தேதி மாநாடு நடத்தப்பட உள்ளது.இந்த மாநாட்டுக்கு கேரள முதல் வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோரை அழைக்கவும் அனைத்து மதத்தலைவர்கள், அறிஞர்களை இதில் பங்கேற்கச்செய்யவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி போராடி வரும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 10-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்றபோது போலீஸாரால் தாக்கப்பட்டுள்ளனர். இது கண்ட னத்துக்குரியது. மக்களின் போராட்ட உணர்வுக்கு மதிப்பு அளிக்காமல், ஒடுக்குமுறை மூல மாக தனது கொடூர சட்டங்களை நிறைவேற்ற மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. நாட்டின் மதச்சார்பின்மை கோட்பாட்டுக்கு ஆதரவாகவும் மக்கள் ஒற்று மைக்காகவும் செயல்பட்டு வரும் இயக்கங்கள் டெல்லி போலீஸாரின் தாக்குதலுக்கு ஒருமித்த குரலில் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x