Published : 10 Feb 2020 08:01 AM
Last Updated : 10 Feb 2020 08:01 AM

தரமில்லாத ஹெல்மெட்களால் உயிரிழக்கும் வாகன ஓட்டிகள்: ஹெல்மெட்களை தேர்வு செய்வதில் கவனம் தேவை

தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களில் 43 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிவதும், அவர்களில் 16 சதவீதம் பேர் முழு மனதுடனும், 13 சதவீதம் பேர் சட்டம் மற்றும் அபராதத்துக்கு பயந்தும், 22 சதவீதம் பேர் பெற்றோர் மற் றும் உறவினர்கள் கட்டாயப்படுத்து வதாலும் அணிவதும் ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்ட பின்னர், ஹெல்மெட் அணிபவர்களின் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால், உயிரைக் காப்பாற்றும் என்று நம்பி அணியும் ஹெல்மெட் கள், சரியான தரத்தில் தயாரிக்கப் படாததால் ஹெல்மெட் அணிந்தும் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. தமி ழகத்தில் கடந்த ஆண்டு நடந்த இரு சக்கர வாகன விபத்துகளில் ஹெல்மெட் அணிந்தும் 270 பேர் பலியாகியுள்ளனர். இதில் பலர் தரமில்லாத ஹெல்மெட்களைப் பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஹெல்மெட் உருவான கதை

1935-ம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த லாரன்ஸ் ஆஃப் அராபியா என்பவர் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது, குறுக்கே இரு சிறுவர்கள் சைக்கிளில் வந்து விட் டனர். இந்த விபத்தில் சிக்கிய லாரன்ஸ், தலையில் அடிபட்ட நிலையில் மருத்துவமனையில் 6 நாள் கோமாவில் இருந்து உயி ரிழந்தார். லண்டன் மருத்துவர் களை இந்தச் சம்பவம் வெகு வாக பாதிக்க, 1941-ம் ஆண்டு ‘பிரிட்டீஸ் மெடிக்கல் சயின்ஸ் ஜர்னல்’க்கு இரு சக்கர வாகன விபத்துகளால் தலையில் அடிபட்டு இறப்பவர்கள் குறித்த ஓர் அறிக்கையை டாக்டர் கெய்ர்ன்ஸ் என்பவர் சமர்ப்பித்தார்.

விபத்தில் இருந்து தலையை காப்பதற்கு ஒரு பொருள் தேவை என்பதை முதல்முறையாக அந்த அறிக்கை உணர்த்தியது. அதே ஆண்டின் இறுதியில் பிரிட்டீஸ் ராணுவத்தில் பணிபுரிந்த 2 வீரர் கள் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழக்க, ராணுவ வீரர்கள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று முதல் முறையாக அறிவிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து மரம் மற்றும் ரப்பரைக் கொண்டு தலையை மட்டும் மறைக்கும் வகையில் ஹெல்மெட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தன.

1953-ம் ஆண்டு தெற்கு கரோ லினா பல்கலைக்கழக பேராசிரியர் சி.எப்.லம்பார்டு என்பவர் ஹெல் மெட்டுக்குள் பஞ்சு போன்ற பொருட் களை வைத்து தயாரித்து, ஹெல் மெட் அணிந்து வாகனம் ஓட்டும் போது தலையில் ஏற்படும் அதிர்வு களை குறைத்தார். 1971-ம் ஆண்டு ராய் ரிச்சர்டு என்பவர்தான் நாம் இப்போது பயன்படுத்தும், தலை முழுவதும் மறைக்கும் ஹெல்மெட்டை கண்டுபிடித்தார். உலகி லேயே முதல்முறையாக ஆஸ்தி ரேலியா நாட்டில்தான் ஹெல்மெட் கட்டாய சட்டம் 1961-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அமல்படுத்தப் பட்டது.

‘ஸ்நெல்’, ‘டாட்’ தரச்சான்று

1957-ம் ஆண்டு வில்லியம் ஸ்நெல் என்ற கார் பந்தய வீரர் விபத்தில் சிக்கி, தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து கனடாவில் ‘ஸ்நெல் மெமோரியல் பவுண்டேஷன்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.

உலகம் முழுவதும் தயாரிக் கப்படும் ஹெல்மெட்களின் தரத்தை பரிசோதனை செய்து அங்கீகாரம் கொடுக்கும் பணியை இந்த அமைப்பு செய்து வருகிறது. ஸ்நெல் அங்கீகாரம் பெற்ற ஹெல் மெட்கள் மிகவும் தரமானவை.

இதேபோல் அமெரிக்காவின் ‘DOT’ (டிபார்ட்மென்ட் ஆப் டிரான்ஸ் போர்ட்), பெல்ஜியத்தின் ‘இசிஇ’ போன்ற அமைப்புகளின் அங்கீ காரம் பெற்ற ஹெல்மெட்கள் உலக அளவில் மிகவும் தரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹெல்மெட்களின் குறைந்தபட்ச விலையே ரூ.4 ஆயிரம். ஆனால் இந்த வகையான ஹெல்மெட்களை இந்தியாவில் யாருமே பெருமள வில் விற்பனை செய்யவில்லை.

‘ஐஎஸ்ஐ’ கட்டாயம் தேவை

இந்தியாவில் விற்கப்படும் ஹெல்மெட்கள் 1 கிலோ 200 கிராம் எடைக்குள் இருக்க வேண்டும் என்று ‘ப்யூரோ ஆப் இந்தியன் ஸ்டேன்டர்ட்ஸ்’ (பிஐஎஸ்) நிபந் தனை விதித்தது. ஆனால், இந்த நிபந்தனையால் தரமில்லாத ஹெல்மெட்கள் தயாரிக்கப்படும் என்று கூறப்பட்டதால் 2018-ம் ஆண்டு இந்த நிபந்தனை நீக்கப் பட்டது.

தற்போது இந்தியாவில் ஐஎஸ்ஐ முத்திரையுடன் கூடிய ஹெல்மெட் கள் 1.5 கிலோ எடையுடன் விற் பனை செய்யப்படுகின்றன. எனவே, ஹெல்மெட்களைத் தேர்வு செய்யும் போது, அவை நமது தலைக்கு சரியாக பொருந்துகிறதா, ஐஎஸ்ஐ அல்லது பிஐஎஸ் தரச்சான்று இருக்கிறதா, உண்மையில் அது தரமான ஹெல்மெட்டா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.

ஹெல்மெட்களில் ‘டபுள் டி லாக்’ இருப்பது அவசியம். ‘டபுள் டி லாக்’ உள்ள ஹெல்மெட்கள் அணிந்தால், விபத்தின்போது தலை யில் இருந்து ஹெல்மெட்கள் கழன்று விடாமல் இருக்கும் என ஹெல்மெட் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆர்.சிவா


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x