Published : 05 Aug 2015 09:14 AM
Last Updated : 05 Aug 2015 09:14 AM

கொற்கை பாண்டியர்களின் ‘மாறன்’ பெயர் பொறித்த நாணயம்: தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி தகவல்

சங்ககால கொற்கைப் பாண்டியர்க ளால் கி.மு. 3 அல்லது 4-ம் நூற் றாண்டில் வெளியிடப்பட்ட நாணய த்தில் ‘மாறன்’ என்ற பெயர் பொறிக் கப்பட்டிருப்பதாக தென்னிந்திய நாணயவியல் ஆய்வுக் கழகத் தலைவர் இரா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

இதுகுறித்து இரா.கிருஷ்ண மூர்த்தி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலியில் 30 ஆண்டுக ளுக்கு முன்பு கிடைத்த நாணயங் களை சமீபத்தில் சோதனை செய்த போது, அதில் ஒரு நாணயம் வித்தி யாசமாக, சதுர வடிவில் இருந் தது. அது வெள்ளீயத்தால் (‘டின்’) செய்யப்பட்டது. தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து, இந்தோனே சியாவில் வெள்ளீயம் முற்காலத்தில் இயற்கையாக கிடைத்தது.

கொற்கை துறைமுகம், சங்க காலத்தில் மிகச் சிறப்பான வணிக கேந்திரமாக இருந்துள்ளது. அங்கு விளைந்த முத்துக்களை வாங்க, மேலைநாட்டு கிரேக்க வணிகர்கள், ரோமானியர்கள் வந்துள்ளனர். சங்ககாலத்தில் கொற்கை வணி கர்கள் தங்கள் மரக்கலன்கள் மூலம் கீழ் திசை நாடுகளுக்கு சென்று, அங்குள்ள பொருட்களை வாங்கி வந்திருக்கின்றனர். அவ்வாறு வரும்போது, இயற்கையாக கிடைத்த வெள்ளீயத்தையும் கொண்டு வந்திருக்கின்றனர்.

அந்த நாணயத்தின் முன்புறம் எருது ஒன்று இடப்பக்கம் நோக்கி நிற்கிறது. அதன் கொம்புக்கு அருகில், முழுமையாக அச்சாகாத ‘மா’ என்ற எழுத்து தெரிகிறது. இந்த எழுத்து, மவுரிய பிராமி வகை யைச் சேர்ந்தது. எருதின் மேல் புறம் ‘ற’ என்ற எழுத்தும், கடைசி யாக ‘ன்’ என்ற எழுத்தும் காணப் படுகின்றன. இவை தமிழ் பிராமி வகையைச் சேர்ந்தவை. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்தால் ‘மாறன்’ என்ற பெயர் வருகிறது. புற நானூற்று பாடல்களில் இப்பெயரைப் பார்க்கலாம்.

எருதின் பின்புறம் மிகத் தொன் மையான சின்னம் உள்ளது. அதில், நடுவில் ஒரு வட்டம், அதை சுற்றி 2 ‘டவுரின்’ சின்னங்கள், 2 பெரிய புள்ளிகள் உள்ளன. இச்சின்னம் கி.மு. 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெள்ளி முத்திரை நாணயங்களில் காணப்படுகிறது. எருதின் முன்புறம் இருக்கும் சின்னம், சிறு ஆறுபோல தெரிகிறது. கி.மு. 5-ம் நூற்றாண்டில் உள்ள சில வடநாட்டு பழங்குடியினர் வெளியிட்ட நாணயங்களில் இதை காண முடியும்.

நாணயத்தின் பின்புறம் தெளிவில் லாமல் தேய்ந்த நிலையில் உள்ளது. நுட்பமாக ஆய்வு செய்தால், ஒரு வீரன் எருதை அடக்க முயற்சிப்பது போல தெரிகிறது. தொன்மைக் காலத்திலேயே ‘ஜல்லிக்கட்டு’ விளையாட்டு இருந்திருக்கலாம்.

சங்ககால மதுரைப் பாண்டி யர்களின் கோட்டு வடிவ மீன் சின்னம் இதில் இல்லை. அதனால், இந்த நாணயம் சங்ககால கொற்கைப் பாண்டியர்களால் வெளியிடப்பட்டது என்று உறுதியாக நம்பலாம். இதன் காலம் கி.மு. 3 அல்லது கி.மு. 4-ம் நூற்றாண்டாக இருக்கக்கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x