Published : 10 Jan 2020 12:18 PM
Last Updated : 10 Jan 2020 12:18 PM

ரஜினி தமிழ்நாட்டுக்கு உதவ வேண்டும்: கமல்ஹாசன்

ரஜினி தமிழ்நாட்டுக்கு உதவ வேண்டும் எனத் தான் விரும்புவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த 'கமல் 60' நிகழ்ச்சியில் மக்களின் நலனுக்காக அரசியலில் சேர்ந்து பயணிக்கத் தயார் என்று ரஜினியும் கமலும் தெரிவித்தனர். இது அரசியல் தளத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

இந்நிலையில் ரஜினியுடன் இணைந்து பயணிப்பது குறித்து கமல்ஹாசன் மீண்டும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த உரையாடல் நிகழ்வில் கமல்ஹாசன், 'இந்து' என்.ராம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாடினர்.

இதில் 'இந்து' என்.ராம் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த கமல்ஹாசன் பேசியதாவது:

“ரஜினி இப்போது ஒரு பெருமைமிகு தமிழர். அவர் தமிழ்நாட்டுக்கு உதவ வேண்டும் என விரும்புகிறேன். அதற்கு அவரை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி செய்வேன். அவரும் அந்த மனநிலையில்தான் இருக்கிறார். 'ஹேராம்' படம் எடுத்தபோதே நான் அரசியலுக்கு வந்துவிட்டேன். அரசியல் சூழலின் அப்போதைய அறிகுறிகள்தான் அந்தப் படத்தை எடுக்க என்னைத் தூண்டியது. இப்போது அந்தப் படத்தை எடுப்பது சிரமமாக இருந்திருக்கும்.

திராவிட அரசியல் அன்றைய காலத்தின் தேவையாக இருந்தது. ஆனால், பின்னாட்களில் அது அந்தந்தக் கட்சிகளின் தேவையாக மாறிப்போனது. தமிழகத்துக்கு திராவிட அரசியல் மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் அதைச் சரியான பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும்”.

இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x