Published : 04 Jan 2020 11:54 AM
Last Updated : 04 Jan 2020 11:54 AM

தங்கச்சிமடம் ஊராட்சி தலைவராக முன்னாள் தலைமை ஆசிரியர் தேர்வு

ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சிமடம் ஊராட்சித் தலைவராக முன்னாள் தலைமை ஆசிரியரான எஸ். குயின் மேரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராமேசுவரம் அருகே மண்டபம் ஒன்றியத்தில் உள்ள தங்கச்சிமடம் ஊராட்சி பெண்களுக்கு (பொது) ஒதுக்கப்பட்டது. இதில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு குயின்மேரி, ரெஜி, ஆரோக்கிய நிர்மலா, லோவியா தெரஸ் ஆகியோர் போட் டியிட்டனர். இதில் 67 வயதான குயின் மேரி வெற்றி பெற்றார். இவர் தங்கச்சிமடத்தில் உள்ள புனித யாகப்பா பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

கடந்த டிச. 13-ம் தேதி தங்கச்சிமடம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு மீனவர்கள் நடத்திய மாதிரி தேர்தலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் கூறியதாவது:

32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் இருந்துள்ளேன். தங்கச்சிமடம் கிராமத்திலுள்ள பிரச்சினை மட்டுமின்றி இங்குள்ள வீட்டின் பிரச்சினைகளையும் தெரிந்து வைத்துள்ளேன்.

இப்பகுதியில் அடிக்கடை தடை ஏற்படும் மின்சாரப் பிரச்சினை, காவிரி கூட்டுக்குடி நீர் பிரச்சினையைத் தீர்க்க முன்னுரிமை அளிப்பேன். தங்கச்சிமடம் மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. இங்குள்ள மாணவர்கள் உயர்கல்வி பெறவும், அரசுப் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கத் தேவையான நடவடிக்கை எடுப்பேன்.

விளையாட்டின் மீது ஆர்வமுடைய மாணவர்கள் அதிகம் உள்ளனர். ஆனால், விளையாட்டரங்கம் கிடையாது. விளையாட்டரங்கு அமைக்கத் தேவையான நடவடிக்கை எடுப்பேன், என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x