Published : 02 Jan 2020 10:53 AM
Last Updated : 02 Jan 2020 10:53 AM

கொடைக்கானலில் 17 தபால் வாக்குகளும் செல்லாதவை: ஒட்டன்சத்திரத்தில் ஒரே ஒரு தபால் வாக்கு மட்டுமே செல்லத்தக்கதாக அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பதிவான 17 தபால் வாக்குகளும் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பழநியில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் தபால் வாக்குகள் மொத்தம் 74 எண்ணப்பட்டத்தில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 73 தபால் வாக்குகள் செல்லாத வாக்குகள்.

வாக்குச் சீட்டுகளுடன் உரிய ஆவணங்கள் இல்லாததாலேயே வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் தொய்வு:

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குச் சீட்டுகளை எப்படிப் பிரிப்பது, அவற்றை எப்படி எண்ணுவது என்று முறையாக அலுவலர்களுக்கு பயிற்சி இல்லாததால் திணறி வருகின்றனர். இதனால் வாக்கு எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மொத்தம், 77.11.% வாக்குப்பதிவானது. இந்நிலையில், திண்டுக்கல்லில் 13 இடங்களில் இன்று காலை 8 மணி தொடங்கி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ஆனால், அலுவலர்களுக்கு பயிற்சி இல்லாததால் வாக்கு எண்ணும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

செல்போன் திருட்டு..

திண்டுக்கல்லில் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும்போது கூட்டநெரிசலில் திண்டுக்கல் ஒன்றிய கவுன்சில் வார்டு அதிமுக வேட்பாளர் செல்போன் திருடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x