Published : 15 Dec 2019 08:40 am

Updated : 15 Dec 2019 08:40 am

 

Published : 15 Dec 2019 08:40 AM
Last Updated : 15 Dec 2019 08:40 AM

விரைவு ரயில்களில் ஐஆர்சிடிசி விற்கும் உணவு பொருட்கள் விலை ரூ.40 வரை திடீரென உயர்வு

food-price-in-express-trains

சென்னை

விரைவு ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஐஆர்சிடிசி மூலம் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை ரூ.5 முதல் ரூ.40 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு விரைவில் அமலுக்கு வருகிறது.

இந்திய ரயில்வேயில் இயக் கப்படும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் தினமும் 2 கோடியே 50 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். ரயில் பயணிகளுக்காக உணவு தயா ரிப்பு மற்றும் விநியோகப் பணியை கடந்த 2 ஆண்டுகளாக ஐஆர்சிடிசியே மேற்கொண்டு வருகிறது. சிற்றுண்டி, சாப்பாடு என சைவம், அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ அதிவிரைவு சொகுசு ரயில்களில் பயணிகளுக்கு விற்பனை செய் யப்படும் உணவு விலை கடந்த நவ. 15-ம் தேதி உயர்த்தப்பட்டது. ஏசி முதல் வகுப்பு மற்றும் எக்ஸிகியூட்டிவ் பிரிவில் தேநீர் ரூ.6 உயர்த்தப்பட்டு ரூ.35 ஆகவும் காலை சிற்றுண்டி ரூ.7 உயர்த்தப்பட்டு ரூ.140 ஆகவும் மதியம் உணவு, இரவு உணவு ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.245 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2-ம் வகுப்பு ஏசி பிரிவு, 3-ம் வகுப்பு ஏசி மற்றும் சேர் கார் பிரிவில் தேநீர் விலை ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.20 ஆகவும் காலை உணவு ரூ.8 உயர்த்தப்பட்டு ரூ.105 ஆகவும் மதிய உணவு மற்றும் இரவு உணவு ரூ.10 அதிகரிக்கப்பட்டு ரூ.185 ஆகவும் நிர்ணயம் செய்து விற்கப்பட்டு வருகிறது.

இதுதவிர வழக்கமான விரைவு ரயில்கள், ரயில் நிலையங்கள், ஓய்வு அறைகள் என ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் ஐஆர் சிடிசி மூலம் விற்கப்படும் உணவு பொருட்களின் விலையும் நேற்று முன்தினம் உயர்த்தப்பட்டது. இதன் படி, ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.40 வரை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘ரயில் பயணிகளுக்கு தரமான உணவு பொருட்கள் வழங்கும் வகையில் ரயில்வே அமைச்சகம் பல்வேறு மாற்றங்களை செய்து புதிய உணவு தயாரிப்பு கொள் கையை வெளியிட்டுள்ளது. பயணி களுக்கு நியாயமான விலையில் உணவு பொருட்களை வழங்கு வதற்காக விலை உயர்த்தப்பட்டுள் ளது. இந்த புதிய விலை மாற்றம் விரைவில் அமலாகும்’’ என்றனர்.

உயர்த்தப்பட்ட விலை விவரம்

காலை உணவு சைவம் ரூ.35, அசைவம் ரூ.45, மதியம் சைவ சாப்பாடு ரூ.70, மதியம் முட்டை சாப்பாடு ரூ.80, சாப்பாடு மற்றும் சிக்கன் குழம்பு ரூ.120, சைவ பிரியாணி ரூ.70, முட்டை பிரியாணி ரூ.80, சிக்கன் பிரியாணி ரூ.100 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

விரைவு ரயில்ஐஆர்சிடிசி விற்கும் உணவுஉணவு பொருட்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author