Published : 13 Dec 2019 10:03 AM
Last Updated : 13 Dec 2019 10:03 AM

1,200 நியாயவிலை கடைகளில் மலிவு விலையில் எகிப்து வெங்காயம் விற்பனை: அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தகவல்

எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு மத்திய தொகுப்பு மூலம் வரும் வெங்காயம் குறைந்த விலையில் தமிழகம் முழுவதும் 1,200 நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தை பொறுத்தவரை 60 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. இதில் 6 ஆயிரம் ஏக்கரில் மட்டும் பெரிய வெங்காயம் பயிரிடப்படுகிறது. மத்திய பிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிராவில் தான் அதிக அளவில் பயிரிடுகின்றனர்.

ஈரோடு, திருப்பூர் மாவட்டங் களில் பெரிய வெங்காயம் பயிரிட்ட நிலையில், காலப்போக் கில் அவர்களும் சிறிய வெங் காயத்துக்கு மாறிவிட்டனர். இத னால்தான் தமிழகத்தில் வெங் காயத் தட்டுப்பாடு அதிகரித்தது.

பல்வேறு நடவடிக்கைகள்

இதைக் கருத்தில் கொண்டு, கடந்த நவ.3-ம் தேதி முதல் டிச.3-ம் தேதி வரை பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் 34 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் கிலோ ரூ.40-க்கு விற்கப் பட்டது.

இதையடுத்து மத்திய தொகுப் பில், எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் முதல்கட்டமாக 6 ஆயிரம் மெட்ரிக் டன் வருகிறது. இதில், குறைந்த பட்சம் ஆயிரம் மெட்ரிக் டன் வழங்க வேண்டும் என்று கோரி, ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வெங்காயம் ஒருசில தினங்களில் வந்துவிடும்.

மருத்துவ குணம் வாய்ந்தது

இந்த வெங்காயம் தமிழகத் தில் 79 பண்ணைப் பசுமை நுகர் வோர் கடைகள் மற்றும் 1,200 நியாயவிலைக் கடைகளில் முதற் கட்டமாக விற்பனை செய்யப்படும். சென்னையில் மட்டும் 500 நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும்.

இந்த வெங்காயத்தில் அதிக அளவு கந்தகம் இருப்பதால், காரத்தன்மையுடன் இருக்கிறது என்றும், இதய நோய்க்கு இது மருந்து என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், புதுக்கோட்டை, தேனி, வேலூர், ஈரோடு, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக் குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மேலும், 50 ஆயிரம் ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காய்கறி பயிர் கடன்கள்

வெங்காய சாகுபடியை அதி கரிக்க, நடப்பு ஆண்டில் மட்டும், கடந்த நவ.30 வரை, 1 லட்சத்து 5 ஆயிரத்து 44 விவசாயிகளுக்கு ரூ.920 கோடியே 14 லட்சம் காய்கறி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரி வித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ், ஆலோசகர் இரா.கார்த்திகேயன் உள்ளிட்டோர் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x