Published : 30 Aug 2015 10:51 AM
Last Updated : 30 Aug 2015 10:51 AM

தற்போது தேர்தல் நடந்தால் ஆளும் அதிமுகவுக்கு 34.1%, திமுகவுக்கு 32.6% மக்கள் ஆதரவு: மக்கள் ஆய்வு மைய கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு 34.1 சதவீதம், திமுகவுக்கு 32.6 சதவீதம் மக்கள் ஆதரவு தருவார்கள் என மக்கள் ஆய்வு மையம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஆய்வக கருத்துக் கணிப்பு முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம், சென்னையில் நேற்று வெளியிட்டார். பின்னர், அவர் கூறியதாவது:

ஜெயலலிதா மீண்டும் முதல்வர் பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகியுள்ளது. மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாகியுள்ள நிலையில் தமிழக அரசியல் சூழ் நிலைகளை ஆராயவும், வரும் சட்டப்பேரவை தேர்தல் கள நில வரம் குறித்தும் மாநில அளவிலான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தின் 28 மாவட்டங்களில் 80 சட்டப்பேரவை தொகுதிகளில் ஆகஸ்ட் 13 முதல் 26 வரை நடந்த ஆய்வில் 3,370 பேரை சந்தித்து கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க் கும் கட்சிகளாக அதிமுக, திமுக அடுத்தடுத்து சுட்டிக் காட்டப்பட் டாலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் செய்யப்போவதில்லை என்ற பதிலே பெரும்பான்மை பெறுகிறது.

ஜெயலலிதா மீண்டும் முதல்வ ராக பொறுப்பேற்று 3 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மின்தடை நீக்கும் நடவடிக்கை, ரேஷன் பொருட்கள் விநியோகம், நலத் திட்டங்கள் செயலாக்கம், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு உள்ளிட்டவை சிறப்பாக இருப்பதாக பெரும் பாலோர் தெரிவித்துள்ளனர். விலையில்லா மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், திருமண உதவித் தொகை, மாணவர்களுக்கு கணினி, முதியோர் உதவித் தொகை, அம்மா உணவகம் உள் ளிட்ட திட்டங்களுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதிமுக அரசின் ஒட்டுமொத்த செயல் திறன் நன்றாக இருப்பதாக 59.1 சதவீதத் தினர் தெரிவிக் கின்றனர்.

சட்டப்பேரவை தேர்தல் அறி விப்பு வரை ஜெயலலிதாவின் தற் போதைய அணுகுமுறை தொடர்ந் தால், தேர்தல் முடிவுகள் எப்படி அமையக்கூடும் என்ற கேள்விக்கு அதிமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என 24.7 சதவீதம் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

பாஜக - அதிமுக கூட்டணி அமைக்க அதிகம் வாய்ப்புள்ளதாக வும் திமுக, அதிமுகவுக்கு மாற்று கட்சிகள் தமிழகத்தில் கிடையாது என 53.4 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். ஆட்சியில் பங்கு கேட்டு சில கட்சிகள் வலியுறுத்தி வரும் கருத்துக்கு அதிகபட்சமாக 35.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அடுத்த முதல்வர் ஆவதற்குரிய தகுதி என்ற கேள்விக்கு 31.56 சதவீதம் பேர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக பொருளாளர் ஸ்டாலினுக்கு 27.98%, திமுக தலைவர் கருணா நிதிக்கு 21.33%, தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு 6.24%, பாமக அன்புமணிக்கு 2.27% ஆதரவு தெரி வித்துள்ளனர். வைகோ (1.85%), திருமாவளவன்(1.13%), ஜி.கே.வாசன்(1.01%) தமிழிசை(0.93%), சீமான்(0.84%) ஆகியோர் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் அதிமுகவுக்கு 34.1 சதவீதம் பேரும், திமுகவுக்கு 32.6 சதவீதம் பேரும் ஆதரவு அளிப்பதாக தெரிவித் துள்ளனர். தேமுதிகவுக்கு 4%, பாமகவுக்கு 3%, பாஜகவுக்கு 2.9%, காங்கிரஸுக்கு 1.6% ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x